“வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கையை தொடர்ந்து அதிகப்படுத்த முடியாது” – நிறுவனங்களுக்கு அறிவுரை

சிங்கப்பூரில் ஊழியர்கள் எவ்வளவு மணிநேரங்கள் வேலை
Photo: TODAY

வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளுக்கான தேவை தொடர்ந்து நீடிப்பதாக மனிதவள அமைச்சர் டான் சீ லெங் கூறியுள்ளார்.

கட்டுமான துறையில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு தங்கும் விடுதிகள் போதிய அளவு உள்ளனவா என்ற கேள்விக்கு அமைச்சர் டான் தன்னுடைய பதிலை கூறினார்.

லிட்டில் இந்தியா செல்லும் ஊழியர்கள் உள்ளிட்ட பொதுமக்களுக்கு போலீசார் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

கோவிட் பாதிப்பிலிருந்து மீண்டுவரும் இந்த சூழலில், நிறுவனங்களுக்கு வெளிநாட்டு ஊழியர்களின் தேவை அதிகரித்திருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இதனால் அவர்களுக்கான விடுதிகளின் தேவையும் தொடர்வதாகவும், அதனை அதிகரிக்க அரசாங்கம் தொடர்ந்து பணியாற்றி வருவதாகவும் அவர் சொன்னார்.

பெரிய ப்ராஜெக்ட் திட்டங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சாத்தியமுள்ள இடங்களில் தற்காலிக விடுதிகள் அமைக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில், வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கையை தொடர்ந்து அதிகப்படுத்த முடியாது என கூறிய மனிதவள அமைச்சகம், நிறுவனங்கள் அவர்களை சார்ந்திருப்பதை குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டது.

நிறுவனங்கள் புதிய திட்டங்களை கையில் எடுக்கும் முன் தங்களால் ஊழியர்களை தங்க வைக்க ஏற்பாடு செய்ய முடியுமா என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

வெளிநாட்டு ஊழியர்களுக்கு எதிராக 163 புகார்கள்.. இதுவரை 10 பேர் மீது நடவடிக்கை