வெளிநாட்டு ஊழியர்களுக்கு எதிராக 163 புகார்கள்.. இதுவரை 10 பேர் மீது நடவடிக்கை

work permit salary increase
Pic: MOM

Foreign workers illegal working in Singapore: சட்டவிரோதமாக வேலைசெய்யும் வெளிநாட்டு ஊழியர்கள் தொடர்பில் சுமார் 163 புகார்கள் வந்துள்ளதாக மனிதவள அமைச்சகம் (MOM) கூறியுள்ளது.

அதாவது 2018 முதல் இந்த ஆண்டு அக்டோபர் 18 வரை மேற்கண்ட எண்ணிக்கையில் புகார்களை பெற்றதாக அது கூறியது.

சிங்கப்பூரில் நடந்த சவாலில் 30 மணிநேரம் காரில் கை வைத்து, காரையே பரிசாக தட்டிச்சென்ற சிங்கப்பூர் ஊழியர்

அவர்கள் சட்டவிரோத வெளிநாட்டு விநியோக ஓட்டுனர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதனை மனிதவள அமைச்சர் டான் சீ லெங் நேற்று (நவ.7) நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக குறிப்பிட்டார்.

அந்த புகார்களுக்கு எதிராக MOM நடத்திய விசாரணைகளில் பெரும்பாலானவை சாட்சியம் இல்லாதது என்றும் கூறப்பட்டுள்ளது.

Prime Minister Lee Hsien Loong/X

அதில் வெறும் 10 வெளிநாட்டு ஊழியர்களுக்கு எதிராக மட்டுமே அமலாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக அவர் சொன்னார்.

சிங்கப்பூரில் முறையான வேலை அனுமதி இல்லாமல் சட்டவிரோதமாக உணவு விநியோக ஓட்டுநர்களாக பணிபுரியும் வெளிநாட்டவர்கள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் யிப் ஹான் வெங் கேள்வி எழுப்பினார், அதற்கு டான் பதிலளித்தார்.

இந்த குற்றத்திற்கு S$20,000 வரை அபராதம் அல்லது இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

முன்னர், இதே குற்றத்திற்காக இந்திய ஊழியர் உட்பட 4 பேர் சிக்கினர். அவர்கள் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

“மக்கள் ஏன் இவ்வளவு ரூடாக இருக்கிறார்கள்” – சிங்கப்பூர் வந்த சுற்றுலா பயணி கவலை

சிங்கப்பூரில் சிக்கிய இந்திய ஊழியர் உட்பட 4 வெளிநாட்டு ஊழியர்கள்.. சட்டவிரோத வேலை – நிரந்தர தடை விதிக்கப்படலாம்