சிங்கப்பூரில் சிக்கிய இந்திய ஊழியர் உட்பட 4 வெளிநாட்டு ஊழியர்கள்.. சட்டவிரோத வேலை – நிரந்தர தடை விதிக்கப்படலாம்

ஹென்டர்சன் சாலை
Tamil Micset Singapore File Photo

சிங்கப்பூரில் சட்டவிரோதமாக பணிபுரிந்த இந்திய ஊழியர் உட்பட 4 வெளிநாட்டு ஊழியர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அதாவது அவர்கள் உணவு விநியோகம் செய்யும் வேலையை பார்த்து வந்ததாக சொல்லப்பட்டுள்ளது.

லிட்டில் இந்தியாவில் “தீபாவளி உணவு சந்தை” – முறுக்கு முதல் ருசியான பிரியாணி வரை இந்திய பாரம்பரியம்

Foodpanda, Deliveroo ஆகிய நிறுவனங்களில் முறையான வேலை அனுமதியின்றி அவர்கள் பணிபுரிந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அவர்களில் ஒருவர் இந்தியாவை சேர்ந்த அமானுல்லா பைசல் நவாஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்றர்கள் இங் டெயிக் ச்வான், சாவ் சூன் யாவ் மற்றும் முஹம்மட் சுயாசுவான் ஷரில் ஆகியோர் ஆவர்.

இவர்கள் மூவரும் மலேசியாவை சேர்ந்தவர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

வெளிநாட்டு ஊழியர்கள் வேலைவாய்ப்புச் சட்டத்தின் கீழ் அவர்கள் நால்வர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குற்றம் நிரூபணமானால் சிங்கப்பூரில் வேலை செய்ய இவர்களுக்கு நிரந்தர தடை விதிக்கப்படும்.

வெற்றிகரமாக தகர்த்தப்பட்ட 2ம் உலகப் போர் வெடிகுண்டு: “பாதிக்கப்பட்ட பகுதிக்கு செல்லவேண்டாம்” – போலீஸ்