லிட்டில் இந்தியா செல்லும் ஊழியர்கள் உள்ளிட்ட பொதுமக்களுக்கு போலீசார் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

லிட்டில் இந்தியா செல்லும் ஊழியர்கள் உள்ளிட்ட பொதுமக்களுக்கு போலீசார் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு Deepavali-police-advisory
PARKROYAL Hotels & Resorts / Facebook

Little India Deepavali rules: தீபாவளியை முன்னிட்டு லிட்டில் இந்தியாவில் மக்கள் கூட்டம் அதிக அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், முடிந்தவரை அப்பகுதியை தவிர்க்குமாறு வாகன ஓட்டிகளுக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

வெளிநாட்டு ஊழியர்களுக்கு எதிராக 163 புகார்கள்.. இதுவரை 10 பேர் மீது நடவடிக்கை

மேலும், மது தொடர்பாக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளையும் கடைபிடிக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகைக்கு முதல்நாள் நவ.11ம் தேதி, சிராங்கூன் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

கூட்ட நெரிசலை தவிர்க்க மாற்று வழிகளை பயன்படுத்துமாறு வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில், Anguilla பள்ளிவாசலுக்கு முன்னால் உள்ள பிர்ச் சாலையில் அமைந்துள்ள பாதசாரி கடவு பாதைகள் வரும் நவம்பர் 11, மாலை 4 மணி முதல் நவம்பர் 12, அதிகாலை 4 மணி வரை மூடப்படும்.

அதே போல தேவைப்பட்டால், கேம்பல் லேனில் உள்ள பாதசாரி கடவு பாதைகளும் மூடப்படலாம்.

பாதசாரிகளுக்கு உதவும் வகையில் அடையாளங்கள் அமைக்கப்பட்டு இருக்கும், மேலும் போக்குவரத்தை கட்டுப்படுத்த துணை போலீஸ் அதிகாரிகளும் இருப்பார்கள் என சொல்லப்பட்டுள்ளது.

லிட்டில் இந்தியாவில் மது தொடர்பான கட்டுப்பாடுகள் இருப்பது உங்களுக்கு தெரியும்.

இந்த விதிமுறைகளின்படி, கட்டுப்படுத்தப்பட்ட இடங்களில் வரும் நவ.10ஆம் தேதி இரவு 10:30 மணி முதல் நவ.14ஆம் தேதி காலை 7 மணி வரை பொதுமக்கள் மது அருந்த அனுமதி இல்லை.

ஒர்க் பெர்மிட் வந்து வேறு வேலையை பார்த்து, குற்றங்கள் செய்தவர் சிங்கப்பூரை விட்டு வெளியேற்றப்படுவார்..