ஒர்க் பெர்மிட்டில் வந்து வேறு வேலையை பார்த்து, குற்றங்கள் செய்தவர் சிங்கப்பூரை விட்டு வெளியேற்றப்படுவார்..

Photo: Changi Airport

ஒர்க் பெர்மிட்: சிங்கப்பூர் பொது மருத்துவமனை ஊழியரை தகாத வார்த்தைகளால் திட்டியதாக ஒர்க் பெர்மிட்டில் வந்த பெண் ஒருவர் சிக்கினார்.

போலீஸ் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அதனை சமூக ஊடகத்தில் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்திய அந்த பெண், ஒர்க் பெர்மிட் அனுமதி விண்ணப்பத்தில் போலியான தகவல்களை கொடுத்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

வெளிநாட்டு ஊழியர்களுக்கு எதிராக 163 புகார்கள்.. இதுவரை 10 பேர் மீது நடவடிக்கை

29 வயதான ஹான் ஃபெய்சி என்ற அந்த பெண்ணுக்கு S$600 அபராதத்துடன் கூடிய ஐந்து வாரங்கள் மற்றும் ஐந்து நாட்கள் சிறைத்தண்டனை கடந்த அக்டோபர் 25 ஆம் தேதி விதிக்கப்பட்டது.

இந்நிலையில், தண்டனை முடிந்ததும் அந்த பெண் அவரின் சொந்த நாடான சீனாவுக்கு அனுப்பப்படலாம் என்றும் வழக்கறிஞர் ஒருவர் ஷின் மின் டெய்லி நியூஸிடம் தெரிவித்தார்.

“எனது அனுபவத்தின் அடிப்படையில், இதுபோன்ற குற்றத்தில் ஈடுபடும் நபர்களின் சிறை தண்டனை முடிந்த பிறகு, அவர்கள் குடிநுழைவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையத்தின் (ICA) அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவார்கள்” என வழக்கறிஞர் கூறினார்.

பின்னர், “ICA அதிகாரிகள் அந்த நபர்களை சாங்கி விமான நிலையத்திற்கு அழைத்துச் சென்று, உடனடியாக அவர்களை சொந்த நாட்டுக்கு அனுப்பி வைத்துவிடுவார்கள்” என்றும் அவர் கூறினார்.

சிங்கப்பூரில் நடந்த சவாலில் 30 மணிநேரம் காரில் கை வைத்து, காரையே பரிசாக தட்டிச்சென்ற சிங்கப்பூர் ஊழியர்

ஒர்க் பெர்மிட்டில் குறிப்பிட்ட வேலையை பார்க்காமல் வேறு வேலையை பார்த்தவருக்கு செக்

ஒர்க் பெர்மிட் நிபந்தனைகளை மீறி.. போலீசை தகாத வார்த்தைகள் பேசி வீடியோ வெளியிட்டு சிக்கிய வெளிநாட்டவர்