ஒர்க் பெர்மிட் நிபந்தனைகளை மீறி.. போலீசை தகாத வார்த்தைகள் பேசி வீடியோ வெளியிட்டு சிக்கிய வெளிநாட்டவர்

ஒர்க் பெர்மிட் நிபந்தனைகளை மீறியது.. போலீசை தகாத வார்த்தைகள் பேசி வீடியோ வெளியிட்டு சிக்கிய வெளிநாட்டவர் - work permit singapore
Stomp

சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் (SGH) செவிலியரை தகாத வார்த்தைகளால் திட்டியதாக பெண் ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அதோடு, SGH இல் போலீஸ் அதிகாரிகளிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அதனை சமூக ஊடகத்திலும் அவர் பதிவிட்டுள்ளதாக சொல்லப்பட்டுள்ளது.

“மீனை உண்ணும் மீன்” – மிகவும் அரிதான புகைப்படத்தை எடுத்து சர்வதேச விருதை வென்ற சிங்கப்பூரர்!

சீன நாட்டவரான ஹான் ஃபெய்சி என்ற அந்த பெண், தனது ஒர்க் பெர்மிட் அனுமதி நிபந்தனைகளையும் மீறியிருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.

சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் அந்த பெண் தகாத முறையில் பேசியது குறித்து கடந்த அக்.10 ஆம் தேதி நள்ளிரவு 2.35 மணியளவில் உதவி வேண்டி அழைப்பு வந்ததாக காவல்துறை கூறியது.

தன் காயமடைந்த காலுக்கு சிகிச்சை பெற மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்த அந்த 29 வயது பெண் சத்தம்போட்டு பொதுமக்களுக்கு தொல்லையை ஏற்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

அதாவது காவல்துறை வருவதற்கு முன்பே அவர் செவிலியரை தகாத வார்த்தைகளால் திட்டியதாகக் கூறப்படுகிறது.

அதிகாலை 3.15 மணியளவில், இரண்டு விசாரணை அதிகாரிகள் அந்தப் பெண்ணை விசாரிக்க வந்தனர்.

அதிகாரிகளுக்கும் அந்தப் பெண் ஒத்துழைப்பு தராமல், மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

அதனை வீடியோ எடுத்த அவர் அதனை சமூக ஊடகத்திலும் பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில், இவரது வழக்கு அக்டோபர் 25 க்கு ஒத்திவைக்கப்பட்டது.

வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதி அறையில் 12 பேர் மட்டும், தனிப்பட்ட இடம், வசதியான கழிவறை – உயரும் தரம்