“மீனை உண்ணும் மீன்” – மிகவும் அரிதான புகைப்படத்தை எடுத்து சர்வதேச விருதை வென்ற சிங்கப்பூரர்!

fish-eat-fish photo won
Lilian Koh

நீருக்கடியில் சிங்கப்பூர் புகைப்பட கலைஞர் எடுத்த புகைப்படம் சிறப்புமிக்க சர்வதேச விருது ஒன்றை தட்டிச்சென்றுள்ளது.

பிலிப்பைன்ஸின் அனிலாவ் கடற்கரையில் 15 முதல் 20 மீட்டர் நீருக்கடியில் அந்த புகைப்படம் எடுக்கப்பட்டது.

வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதி அறையில் 12 பேர் மட்டும், தனிப்பட்ட இடம், வசதியான கழிவறை – உயரும் தரம்

Lizardfish என்னும் பல்லிமீன் ஒன்று juvenile grouper என்னும் மீனை விழுங்க முயலும் காட்சியை Lilian Koh என்ற பெண் புகைப்பட கலைஞர் தத்ரூபமாக எடுத்துள்ளார்.

Lilian Koh

“நீருக்கடியில் உள்ள வாழ்க்கை” என்ற பிரிவில் இந்த புகைப்படம் சர்வதேச அளவில் அவருக்கு வெற்றியை பெற்றுத்தந்துள்ளது.

Lilian Koh

இந்த இரு மீன் இனங்களும் அசாதாரணமானது இல்லை என்றாலும், “இது போன்ற அற்புதமான காட்சிகள் எடுப்பது கடினம்” என்று அவர் Mothership தளத்திடம் பகிர்ந்து கொண்டார்.

மெரினா ஈஸ்ட் பார்க்கில் காணப்பட்ட முதலை.. அதற்காக அரசாங்கம் எடுத்த முடிவு என்ன?