மெரினா ஈஸ்ட் பார்க்கில் காணப்பட்ட முதலை.. அதற்காக அரசாங்கம் எடுத்த முடிவு என்ன?

crocodile-marina-east-drive
CK Lee/Facebook

சிங்கப்பூரின் மரினா ஈஸ்ட் டிரைவில் கடந்த அக். 10 அன்று காலை முதலை ஒன்று தென்பட்டது குறித்து நாம் பதிவிட்டு இருந்தோம்.

இந்நிலையில், பொதுமக்களின் பாதுகாப்பு நலனில் அக்கறை கருதி அந்த முதலை கொல்லப்பட உள்ளதாக Npark தெரிவித்தது.

வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதி அறையில் 12 பேர் மட்டும், தனிப்பட்ட இடம், வசதியான கழிவறை – உயரும் தரம்

மேற்கே மரினா பேரேஜ் – Gardens by the Bay மற்றும் கிழக்கே ஈஸ்ட் கோஸ்ட் பார்க்கிற்கும் இடையில் மரினா ஈஸ்ட் டிரைவில் காணப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த Estuarine முதலைகள் சிங்கப்பூரை பூர்வீகமாகக் கொண்டவை ஆகும். இது உலகின் மிகப்பெரிய முதலை இனங்களில் ஒன்றாகும்.

தென்பட்ட அந்த முதலை சுமார் 3 மீ நீளம் இருக்கும் என சொல்லப்பட்டுள்ளது. பொதுவாக அது ஐந்து மீட்டருக்கும் அதிகமாக வளரும் தன்மை கொண்டது.

ஏன் அது வேறு இடத்திற்கு மாற்றப்படாமல் கொல்ல முடிவு செய்யப்பட்டது என்ற கேள்விக்கும் அது பதில் கூறியுள்ளது.

வேறு இடத்திற்கு மாற்றப்பட்டால், அது மீண்டும் பழைய இடத்திற்கு திரும்பும் ஆபத்து ஏற்படலாம் என்று Npark தெரிவித்தது.

மெரினா ஈஸ்ட் பார்க் அருகே வாக்கிங் வந்த முதலை.. உலகின் மிகப்பெரிய முதலை இனம் இது

ஸ்கூட் விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வெளிநாட்டு பயணி கைது