ஸ்கூட் விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வெளிநாட்டு பயணி கைது

Scoot flight threat passenger arrested

ஸ்கூட் விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வெளிநாட்டு பயணி ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

நேற்று (அக். 12) சிங்கப்பூரில் இருந்து பெர்த் நோக்கிச் சென்ற விமானத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதி அறையில் 12 பேர் மட்டும், தனிப்பட்ட இடம், வசதியான கழிவறை – உயரும் தரம்

இந்நிலையில், மிரட்டல் விடுத்த 30 வயதான ஆஸ்திரேலிய ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும், விசாரணைகள் நடந்து வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

மாலை 4.11 மணிக்கு புறப்பட்ட விமானத்தில், 4.55 மணியளவில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து தகவல் வந்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனை அடுத்து, விமானம் மீண்டும் சிங்கப்பூருக்கு திரும்பியது. அதாவது அன்று மாலை சுமார் 6.26 மணியளவில் சாங்கி விமான நிலையத்தில் விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

பின்னர், பாதுகாப்பு சோதனையை மேற்கொண்ட போலீசார் அந்த நபரை கைது செய்தனர்.

இது போன்ற போலியான தகவல்களை சொல்லி, பொதுமக்களை அச்சுறுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் கூறியுள்ளனர்.

“நீங்க எல்லாரும் தாமதமாக தான் வருவீங்க” – இந்தியரை தகாத வார்த்தையால் பேசிய ஓட்டுநர் – நெட்டிசன்கள் காட்டம்