“நீங்க எல்லாரும் தாமதமாக தான் வருவீங்க” – இந்தியரை தகாத வார்த்தையால் பேசிய ஓட்டுநர் – நெட்டிசன்கள் காட்டம்

Screengrab/Instagram/Singapore Incidents

தனியார் வாடகை கார் ஓட்டுநர் ஒருவர் தனது பயணியை இனம் சார்ந்த கருத்துகளால் கொச்சைப்படுத்தியது தற்போது பேசும்பொருளாக மாறியுள்ளது.

அது தொடர்பான வீடியோ ஒன்று கடந்த செவ்வாயன்று (அக். 10) subreddit Singapore என்ற பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது.

ரயில் நிலைய ஊழியரோடு சண்டை.. வெளிநாட்டு ஊழியருக்கு அபாரதம், சிறை

தாம் நீண்ட நேரம் காத்திருப்பதாகவும், “முட்டாள் இந்தியர்” என்றும் பயணியிடம் ஓட்டுநர் மோசமாக நடந்துகொண்ட சம்பவம் தான் வைரலாகி வருகிறது.

வாடகை டாக்ஸிகளில் தாமதமாக வருவதற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்று கூறிய பயணி, ஓட்டுநர் ஒரு இன வாதி என்று குற்றம் சாட்டினார்.

ஏதும் கேட்காமல் முதலில் ஏன் அவர் அவ்வாறு பேசினார் என்பதில் அவர் குழப்பமடைந்தார்.

இருப்பினும், ஓட்டுநர் தனது வார்த்தைகளில் இருந்து பின்வாங்கவில்லை: “நான் இன வாதி அல்ல, இது தான் உண்மை!” என்று மேலும் பேசியது அனைவருக்கும் வெறுப்பை ஏற்படுத்தியது.

“எல்லா இந்தியர்களும் தாமதமாக தான் வருவார்கள்” என்று அவர் மேலும் வாதத்தை தொடர்ந்தார்.

இது குறித்து “Grab இடம் புகார் செய், என்ன வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் புகார் செய்” என்றும் ஓட்டுநர் திமிராக கூறியுள்ளார்.

“மூன்று வினாடிகளில்” வண்டியை விட்டு வெளியேறவில்லை என்றால், காவல் நிலையத்திற்கு அழைத்து செல்வேன் என்று ஓட்டுநர் மிரட்டியுள்ளார்.

மேலும், வண்டியை விட்டு “நீ வெளியே போ!” என்றும் அவர் அநாகரிகமாக நடந்துகொண்டுள்ளார்.

இந்த ஓட்டுநரின் இனவாத தாக்குதலை கண்டு நெட்டிசன்கள் அதிர்ச்சியடைந்தனர், ஓட்டுநர் மீது தான் தவறு இருக்கிறது என பலர் வாதிட்டனர்.

மற்றொருவர் கூறுகையில்: “இந்த முட்டாள் குறித்து புகாரளிக்கப்பட வேண்டும். உண்மையில் இனத்தை இதில் கொண்டு வர வேண்டிய அவசியமில்லை” என்றார்.

10வது மாடியிலிருந்து விழுந்து வெளிநாட்டு கட்டுமான ஊழியர் மரணம்..