ரயில் நிலைய ஊழியரோடு சண்டை.. வெளிநாட்டு ஊழியருக்கு அபாரதம், சிறை

foreign worker train chased assistant station manager fined jailed
Photo: todayonline

ரயில் நிலைய உதவி மேலாளரிடம் சண்டையில் ஈடுபட்ட வெளிநாட்டு ஊழியருக்கு நான்கு வார சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அதோடு அவருக்கு S$800 அபராதமும் விதிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

10வது மாடியிலிருந்து விழுந்து வெளிநாட்டு கட்டுமான ஊழியர் மரணம்..

டிப்போவை நோக்கிச் சென்ற ரயிலை விட்டு வெளியேற மறுத்த 24 வயதுடைய மீனாட்சிசுந்தரம் பாண்டிசெல்வம், மேலாளரிடம் தகராறில் ஈடுபட்டார்.

நள்ளிரவு 12.15 மணியளவில் பொங்கோல் ரயில் நிலையத்தில் இருந்த ரயில் பெட்டியில் பாண்டிசெல்வம் இருந்ததாக நீதிமன்றம் கூறியுள்ளது.

ரயில் டிப்போவுக்கு செல்லவுள்ளதால் அதில் யாரும் இருக்கிறார்களா என்பதை உறுதி செய்ய 55 வயதான நிலைய உதவி மேலாளர் ரயில் பெட்டிகளை ஆய்வு செய்தார்.

அப்போது, ரயிலின் பெட்டிக்குள் சிவந்த கண்களுடன், தள்ளாடி நடந்து சென்ற பாண்டிசெல்வத்தை அவர் கண்டார். அதாவது அவர் போதையில் இருந்துள்ளார்.

ரயிலில் இருந்து வெளியே வாங்க என்று பாண்டிசெல்வத்திடம் மேலாளர் கூறியும், பாண்டிசெல்வம் வெளியேற மறுத்துள்ளார்.

இதனை அடுத்து பாண்டிசெல்வத்தை அவரது உடைமைகளுடன் ரயிலில் இருந்து கீழே இறக்கி இறக்கினார் மேலாளர்.

இதனால், கோபமுற்ற பாண்டிசெல்வம், அவரின் பொருட்களை தூக்கி வீசத் தொடங்கினார்.

இந்நிலையில், இங்கிருந்து வெளியேறாவிட்டால் போலீசை அழைக்கப்போவதாக மேலாளர் கூறியுள்ளார்.

மேலும் கோபமான பாண்டிசெல்வம், நிலைய மேலாளரை துரத்த, அவர் அவர் ரயில் பெட்டிக்குள் ஓடினார்.

பின்னர் ரயில் பெட்டிக்குள் இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டது. இதில் மேலாளர் தலையில் காயம் ஏற்பட்டது.

பாண்டிசெல்வம், மேலாளரின் தலையை ரயில் கதவில் பல முறை மோதி தாக்கினார்.

இதனை அடுத்து இன்னொரு அதிகாரி சண்டையை விலக்கிவிட்டு, அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இந்த ஆண்டு ஜனவரி 16 ஆம் தேதி இந்த சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

கனரக வாகனம், லாரி விபத்து.. இரண்டு ஊழியர்கள் மருத்துவமனையில் அனுமதி