மெரினா ஈஸ்ட் பார்க் அருகே வாக்கிங் வந்த முதலை.. உலகின் மிகப்பெரிய முதலை இனம் இது

crocodile-marina-east-drive
CK Lee/Facebook

சிங்கப்பூரின் தெற்கு முனையில் நேற்று (அக். 10) காலை முதலை ஒன்று தென்பட்டது.

Singapore Wildlife Sightings என்ற பேஸ்புக் குழுவில் முதலையின் புகைப்படத்தை CK Lee என்ற ஆடவர் பகிர்ந்துள்ளார்.

10வது மாடியிலிருந்து விழுந்து வெளிநாட்டு கட்டுமான ஊழியர் மரணம்..

மேற்கே மரினா பேரேஜ் – Gardens by the Bay மற்றும் கிழக்கே ஈஸ்ட் கோஸ்ட் பார்க்கிற்கும் இடையில் அது காணப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த Estuarine முதலைகள் சிங்கப்பூரை பூர்வீகமாகக் கொண்டவை ஆகும்.

மேலும், இந்த இனம் அழியும் அபாயத்தில் உள்ளதாகவும் பட்டியலிடப்பட்டுள்ளது.

Estuarine முதலைகள் என்பது உலகின் மிகப்பெரிய முதலை இனங்களில் ஒன்றாகும்.

மேலும் அது ஐந்து மீட்டருக்கும் அதிகமாக வளரும் தன்மை கொண்டது.

சாத்தியமில்லாத இடத்தில் முதலையை நீங்கள் கண்டால் அதை சீண்டாமல் பின்வாங்கிவிட வேண்டும் என்று Npark கூறியுள்ளது.

மேலும் உதவி தேவைப்பட்டால் 1800-471-7300 என்ற எண்ணில் NParks ஐ அழைக்கலாம்.

“கிரேன் வருது நில்லுங்க” – வெளிநாட்டு ஊழியரின் குரல்.. தொண்டையில் தாக்கிய உலோக துண்டு.. மரணத்தை எட்டி பார்த்த பெண்