“கிரேன் வருது நில்லுங்க” – வெளிநாட்டு ஊழியரின் குரல்.. தொண்டையில் தாக்கிய உலோக துண்டு.. மரணத்தை எட்டி பார்த்த பெண்

woman-throat-struck-metal-debris
Shin Min Daily News & Google Maps

ஆங் மோ கியோவில் உள்ள வேலைத் தளத்திற்கு அருகே பெண் ஒருவரின் தொண்டையில் உலோகத் துண்டு தாக்கியதாக சொல்லப்பட்டுள்ளது.

60 வயதுமிக்க அந்த பெண் மரணத்தின் விளிம்பு வரை சென்றுவந்ததாக கூறப்படுகிறது.

வேலை அனுமதிக்காக இத செய்யாதீங்க.. வெளிநாட்டவருக்கு சிறை

தொண்டையின் பெரிய நரம்புக்கு மிக அருகில் உலோகத் துண்டு தாக்கியதாக அந்தப் பெண்ணின் உறவினர் ஸ்டாம்ப் மற்றும் ஷின் மின் டெய்லி நியூஸிடம் கூறினார்.

சம்பவத்தன்று, பிளாக் 646 ஆங் மோ கியோ அவென்யூ 6 க்கு அருகிலுள்ள கட்டுமான தளத்தின் நடைபாதை வழியாக பேருந்து நிறுத்தத்தை நோக்கி அந்த பெண் நடந்து கொண்டிருந்தார்.

செல்லும் வழியில், கிரேன் இயங்கி கொண்டிருந்த காரணத்தால் பெண்ணை நிற்கும்படி வெளிநாட்டு ஊழியர் ஒருவர் கூறியதாக சொல்லப்பட்டுள்ளது.

கிரேன் நகரும் போது அதில் இருக்கும் சில சிதைவு துண்டுகள் பெண்ணை தாக்கியதாக உறவினர் கூறினார்.

அதனை தவிர்ப்பதற்காக, அவர் திறந்தவெளி கார் பார்க்கிங்கிற்கும் பிளாக் 646 ஆங் மோ கியோ அவென்யூ 6 க்கும் இடையே உள்ள படிக்கட்டுகளை நோக்கி விரைவாக நடந்தார்.

அப்போது அவரின் கழுத்தின் இடது பக்கத்தில் கடுமையான வலியை உணர்ந்ததாகவும், அதிக இரத்தப்போக்கு ஏற்பட்டகாகவும் உறவினர் கூறினார்.

அச்சத்தில் பீதியடைந்த அவர், உடனடியாக அங்கிருந்த வழிப்போக்கர்களிடம் உதவி கேட்டதாக அவர் கூறினார்.

அவரின் அழுகுரலை கேட்ட இருவர், உதவிக்கு விரைந்து வந்தனர். பின்னர் அம்புலன்ஸ்க்கு அழைப்பு விடுத்தனர்.

இதையடுத்து அந்த பெண் கூ டெக் புவாட் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அவரின் தொண்டையில் உள்ள பெரிய நரம்புக்கு அருகே அந்த உலோகத் துண்டு தாக்கியதாகவும், உலோகத் துண்டு நரம்பை தாக்கி இருந்தால் அவரின் உயிருக்கு அது ஆபத்தை ஏற்படுத்திருக்கும் என்றும் மருத்துவர் கூறியதாக சொல்லப்பட்டுள்ளது.

விரைந்து வந்து உதவிய நல்லுள்ளங்களுக்கு அவர் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொண்டார்.

போக்குவரத்து விளக்குகள் வேலை செய்யல.. மழையை பொருட்படுத்தாது போக்குவரத்தை சீர்ப்படுத்திய ஊழியர்