போக்குவரத்து விளக்குகள் வேலை செய்யல.. மழையை பொருட்படுத்தாது போக்குவரத்தை சீர்ப்படுத்திய ஊழியர்

woodlands-delivery-traffic-marshall
Mothership reader

உட்லண்ட்ஸில் உள்ள ஒரு சந்திப்பில் போக்குவரத்து விளக்குகள் வேலை செய்யாத காரணத்தால், ஊழியர் ஒருவர் களத்தில் இறங்கி போக்குவரத்தை சரி செய்தார்.

உணவு விநியோக ஓட்டுநரான அவர் மழையையும் பொருட்படுத்தாது தற்காலிக போக்குவரத்து சேவகராக ஆனார்.

வேலை அனுமதிக்காக இத செய்யாதீங்க.. வெளிநாட்டவருக்கு சிறை

இன்று (அக். 9) மாலை 5:10 மணிவாக்கில் நடந்த இந்த சம்பவத்தின் காணொளியை Mothership வாசகர் ஒருவர் பகிர்ந்துள்ளார்.

இந்த சம்பவம் உட்லண்ட்ஸ் அவென்யூ 4 மற்றும் உட்லண்ட்ஸ் டிரைவ் 44 சந்திப்பில் நடந்ததாக அது கூறியுள்ளது.

ஊழியர் சுமார் 20 நிமிடங்கள் போக்குவரத்தை சரி செய்தார் என்றும், மாலை 5:30 மணிக்கு தன்னுடைய வேலையை பார்க்க சென்றார் எனவும் சொல்லப்பட்டுள்ளது.

வீடு உட்பட அனைத்து சொத்தையும் விற்று அனாதைகளுக்கு உதவி வரும் சிங்கப்பூரர் – “இவரால் சிங்கப்பூருக்கு பெருமை”