வீடு உட்பட அனைத்து சொத்தையும் விற்று அனாதைகளுக்கு உதவி வரும் சிங்கப்பூரர் – “இவரால் சிங்கப்பூருக்கு பெருமை”

Singaporean sells possessions to set up orphanage in Philippines.
PHOTO: Screengrab/TikTok/Colours Global

ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் அனாதைகளுக்கு கருணை இல்லம் அமைக்க தனது உடைமைகள் அனைத்தையும் விற்றுள்ளார் சிங்கப்பூரர் ஒருவர்.

84 வயதான தாமஸ் வீ என்ற அவர், பிலிப்பைன்ஸில் அமைந்துள்ள “வில்லிங் ஹார்ட்ஸ்” என்னும் அனாதை இல்லத்தின் நிறுவனர் ஆவார்.

மயக்க நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண்.. பின்னர் இறந்தது உறுதி – 43 வயது ஆடவர் விசாரணையில்

அவரிடம் வேலைபார்த்த முன்னாள் வெளிநாட்டு பணிப்பெண் ஒருவர் கேட்ட உதவி அவருக்கு ஒரு தூண்டுகோலாக அமைந்தது.

மரியா தெரசா என்ற பணிப்பெண், தனது சொந்த நாட்டிற்கு அனுப்ப வேண்டி உணவு மற்றும் ஆடைகளை அவரிடம் கேட்டார், ​​அப்போது தான் மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற அவரின் உன்னத பயணம் தொடங்கியது.

உதவி தேவைப்படுவோர் குறித்து அதிகமாக அவர் கேட்கத் தொடங்கினார், அதன் பிறகு அவரது ஆர்வம் மேலும் அதிகமானது.

எனவே வீயும் அவரது மனைவியும் தெரேசாவின் சொந்த ஊரான புலகானுக்கு தனிப்பட்ட முறையில் செல்ல முடிவு செய்தனர்.

“அங்குள்ள எல்லா இடங்களிலும் அனாதைகள் மற்றும் பசியுள்ள குழந்தைகளைப் பார்த்தபோது அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்” என்று Colours Global என்னும் கணக்கில் வெளியான TikTok வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கவலையில் மூழ்கிய தாமஸ், அவரின் உடைமைகள் எல்லாவற்றையும் விற்றுவிட்டார். அதாவது அவரது ஹோட்டல் வணிகங்கள், கார்கள் மற்றும் அவரது வீட்டை கூட விற்றுவிட்டார்.

அதன் பின்னர் வீ தெரேசாவுடன் சேர்ந்து, 2008 ஆம் ஆண்டு வில்லிங் ஹார்ட்ஸ் அனாதை இல்லத்தை நிறுவினார்.

இப்போது, ​​நான்கு முதல் 12 வயதுக்குட்பட்ட 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் அங்குள்ளனர், மேலும் அவர்களின் கல்விக்கு தேவையான நிதியுதவியையும் அவர் வழங்குகிறார்.

தொண்டு நிறுவனத்திற்கு தொடர்ந்து நிதியுதவி செய்ய, பிளாக் 120 பொத்தாங் பாசிர் அவென்யூ 1 இல் உள்ள St Isidore சென்டர் என்ற கடையை வீ நடத்தி வருகிறார். அதன் வருமானம் அனைத்தையும் அனாதை இல்லத்திற்கு அனுப்புகிறார்.

இவரால் சிங்கப்பூரர்களுக்கு பெருமை என்று நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.

“இனி சிங்கப்பூரில் இருப்பதை நான் பாதுகாப்பாக உணரவில்லை” – குளியலறை கதவு கீழே கைபேசியை நுழைத்து வீடியோ எடுத்த நபர்கள் – மனமுடைந்த பெண்