வேலை அனுமதிக்காக இத செய்யாதீங்க.. வெளிநாட்டவருக்கு சிறை

ஊழியர்களின் சம்பளத்தை
MOM

சிங்கப்பூரில் வேலை அனுமதியை பெறுவதற்காக, உள்ளூர் நிறுவனத்தில் பணிபுரிவதாக வெளிநாட்டவர் ஒருவர் மனிதவள அமைச்சகத்திடம் (MOM) பொய்யான தகவலை அளித்துள்ளார்.

அவருக்கு எந்த நிறுவனத்திலும் வேலை செய்ய விருப்பமில்லை, மாறாக சிங்கப்பூரில் நிரந்தரவாசி அல்லது குடிமகனாக ஆக வேண்டும் என அவ்வாறு செய்துள்ளார்.

வீடு உட்பட அனைத்து சொத்தையும் விற்று அனாதைகளுக்கு உதவி வரும் சிங்கப்பூரர் – “இவரால் சிங்கப்பூருக்கு பெருமை”

அதற்காக வேண்டி வாங் ஜு என்ற பெண்ணிடம் அவர் உதவி கோரியுள்ளார்.

அதற்காக MW Dynamics என்னும் நிறுவனம் ஒன்றில் சுமார் S$360,000 தொகையை அவர் முதலீடு செய்ய வேண்டும் என அந்த பெண் கூறியுள்ளார்.

திட்டத்தின் ஒரு பகுதியாக, அவர் அந்த நிறுவனத்தில் பணிபுரிவதாகவும், மாதம் S$10,000 சம்பளமாக பெறுவதாகவும் போலியாக குறிப்பிடும்படி பெண் கூறினார்.

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் தனது சம்பளமாக அந்த S$360,000 திரும்பப் பெறுவார் என்றும், மேலும் அவர் எந்த வேலையும் செய்ய தேவையில்லை எனவும் கூறியுள்ளார்.

இதனை அடுத்து அவருக்கு E Pass விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக சொல்லப்பட்டுள்ளது.

இதனை அடுத்து அவர் போலியான தகவல்கள் கொடுத்ததை அதிகாரிகள் கண்டறிந்தனர்.

E Pass வேலை அனுமதி தொடர்பில் தவறான தகவலை கொடுத்த குற்றத்திற்காக 37 வயதான சீன நாட்டவர் ஜாங் கிங்கியாவுக்கு இன்று (அக் 9) நான்கு வார சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

மயக்க நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண்.. பின்னர் இறந்தது உறுதி – 43 வயது ஆடவர் விசாரணையில்