வெளிநாட்டு ஊழியர்களே… மூட்டைப்பூச்சி தாக்குதல் வழக்கத்தைவிட 30% அதிகரிக்குமாம்

dormitory bed bugs remedies

சிங்கப்பூரில் மூட்டைப்பூச்சி வழக்கத்தைவிட 30 சதவீதம் அதிகரிக்கும் என்று முக்கிய பூச்சிக் கட்டுப்பாட்டு நிறுவனங்கள் கூறுகின்றனர்.

இந்த ஆண்டு விடுமுறை காலம் முடிந்த பிறகு வழக்கமான உச்சநிலையை விட மூட்டைப்பூச்சியின் தாக்குதல் அதிகம் இருக்கும் என சொல்லப்பட்டுள்ளது.

“வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கையை தொடர்ந்து அதிகப்படுத்த முடியாது” – நிறுவனங்களுக்கு அறிவுரை

அதிகமானோர் வெளிநாடுகளுக்கு சென்றுவரும் காரணத்தால் இது அதிகரிக்குமென கூறப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் மூட்டைப்பூச்சிகள் ஏற்கனவே அதிகமாக இருக்கும் என்பது நாம் அறிந்தது தான்.

மேலும், ஐரோப்பா மற்றும் தென் கொரியாவின் சில பகுதிகளில் மூட்டைப்பூச்சிகளின் ஆதிக்கம் சவாலாக உருவெடுத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பொதுவாக படுக்கை மெத்தைகளில் மூட்டைப்பூச்சிகள் அதிகமாக காணப்படும், வரும் காலங்களில் அதன் பிரச்சனை அதிகரிக்கும் என அந்நிறுவனங்கள் எச்சரிக்கை செய்கின்றன.

எனவே விழிப்புடன் இருக்குமாறு அந்நிறுவனங்கள் கேட்டுக்கொண்டுள்ளன.

ஊழியர்கள் தங்கும் விடுதிகளில் தலைவலி கொடுக்கும் “மூட்டைப் பூச்சி” – தப்பிக்கும் எஸ்பிரிமெண்ட் சக்ஸஸ்!

தீபாவளி பண்டிகையையொட்டி, லிட்டில் இந்தியாவில் அலைமோதிய மக்கள் கூட்டம்!