தீபாவளி பண்டிகையையொட்டி, லிட்டில் இந்தியாவில் அலைமோதிய மக்கள் கூட்டம்!

தீபாவளி பண்டிகையையொட்டி, லிட்டில் இந்தியாவில் அலைமோதிய மக்கள் கூட்டம்!
Photo: LISHA

 

சிங்கப்பூரில் நாளை (நவ.12) தீபாவளி பண்டிகைக் கோலாகலமாகக் கொண்டாடப்படவுள்ள நிலையில், சிங்கப்பூர் வாழ் இந்தியர்கள் புத்தாடைகள், இனிப்புகள், அலங்காரப் பொருட்கள் உள்ளிட்டவற்றை வாங்க லிட்டில் இந்தியாவில் குவிந்துள்ளதால், மக்கள் கூட்டம் அலைமோதியது.

தீபாவளி பண்டிகையையொட்டி, வழங்கப்பட்ட பீட்சா, சமோசாக்கள்….புன்னகையுடன் பெற்றுக் கொண்ட வெளிநாட்டு ஊழியர்கள்!

அதேபோல், உள்ளூர் மக்கள், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் கடைவீதிகளில் படையெடுத்துள்ளனர். ஏராளமான காவல்துறையினர் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். லிட்டில் இந்தியாவில் உள்ள இனிப்புக் கடைகள், ஜவுளிக்கடைகளில் வியாபாரம் ஜோராக நடைபெற்று வருகிறது.

கடந்த ஆண்டைக் காட்டிலும் வியாபாரம் ஜோராக நடைபெற்று வருவதாக வியாபாரிகள் மகிழ்ச்சித் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, லிட்டில் இந்தியா கேம்பல் லேனில் வீட்டிற்கான அலங்காரப் பொருட்களை வாங்க மக்கள் குவிந்துள்ளனர்.

சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு அரிய வகை உயிரினங்கள் கடத்தல்!

வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ள லிட்டில் இந்தியா பகுதிகளில் உள்ள சாலைகளில் எங்கு பார்த்தாலும் மக்கள் குடும்பம் குடும்பமாக கடைகளுக்கு செல்வதை நம்மால் காண முடிகிறது.

இதனிடையே, தீபாவளி பண்டிகையையொட்டி, சிங்கப்பூர் தலைவர்கள் தீபாவளி திருநாள் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.