சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு அரிய வகை உயிரினங்கள் கடத்தல்!

சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு அரிய வகை உயிரினங்கள் கடத்தல்!
Photo: Customs / Coimbatore Airport

 

கடந்த நவம்பர் 07- ஆம் தேதி அன்று ஸ்கூட் ஏர்லைன்ஸ் விமானம், பயணிகளுடன் சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகள், தங்கள் கொண்டு வந்த பெட்டியை சுங்கத்துறை அதிகாரிகளுக்கு அஞ்சி அங்கேயே விட்டுச் சென்றனர்.

நவ.10- ஆம் தேதி ஸ்ரீ சிவன் கோயிலில் பிரதோஷ பூஜை நடைபெறும் என அறிவிப்பு!

அந்த பெட்டியைத் திறந்து பார்த்த போது, அதிகாரிகளுக்கு அதிர்ச்சிக் காத்திருந்தது. ஏனெனில், அந்த பெட்டியில், மலைப்பாம்பு குட்டிகள், ஆமைகள், சிலந்திகள், ஓணான்கள் ஆகிய அரிய வகை உயிரினங்கள் இருப்பதைக் கண்டு அதிர்ந்துப் போகினர். அவை அனைத்தும், உரிமமின்றி கொண்டு வரப்பட்டது விசாரணையில் தெரிய வந்தது.

இதையடுத்து, இந்த பெட்டியைக் கொண்டு வந்தவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி அதிகாரிகள், டோம்னிக், ராமசாமி உள்பட மூன்று பேர் சிங்கப்பூரில் இருந்து கொண்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, டோம்னிக், ராமசாமி ஆகிய இருவரை கைது செய்த அதிகாரிகள், மற்றொருவரை தேடி வருகின்றனர்.

தீபாவளி பண்டிகையையொட்டி, வழங்கப்பட்ட பீட்சா, சமோசாக்கள்….புன்னகையுடன் பெற்றுக் கொண்ட வெளிநாட்டு ஊழியர்கள்!

இதனிடையே, கடத்திக் கொண்டு வரப்பட்ட அரிய வகை உயிரினங்களை சிங்கப்பூருக்கு திருப்பி அனுப்பும் பணியில் சுங்கத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.