வெளிநாட்டு ஊழியர்களுக்கு மறக்க முடியாத நாளாக மாறிய தீபாவளி

Muthukrishnan/Facebook

சிங்கப்பூர் முழுவதும் தீபாவளி கொண்டாட்டம் சிறப்பாக நடந்து முடிந்தது, அதிலும் குறிப்பாக அதிபர் மாளிகையில் கொண்டாட்டம் களைகட்டியது.

அங்கு சுமார் 15,000 க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கலந்துகொண்டதாக சொல்லப்பட்டுள்ளது.

வெளிநாட்டு ஊழியருக்கு சட்டவிரோத முறையில் உதவி செய்த ஆடவருக்கு S$5,000 அபாரதம்

இஸ்தானாவுக்கு வருகை வந்த நபர்களை, அதிபர் தர்மன் மற்றும் அவரது மனைவி ஜேன் இட்டோகியும் நேரில் வரவேற்றனர்.

சிங்கப்பூரின் பன்முக கலாச்சாரத் தன்மையைக் குறிக்கும் கலாச்சார நிகழ்ச்சிகளுக்கும் அங்கு ஏற்பாடு செய்யப்பட்டன.

இந்திய மற்றும் சீன இசை நிகழ்ச்சிகளும் அங்கு அரங்கேறியது குறிப்பிடத்தக்கது, அது வருகையாளர்களின் செவிகளுக்கு இன்ப விருந்தாய் அமைந்தது.

அதோடு வெளிநாட்டு ஊழியர்களும் மாளிகையை சுற்றிப்பார்த்து அனைத்தையும் கண்டு மகிழ்ந்தனர்.

அதில் 4 இந்திய ஊழியர்கள் அதிபர் தர்மன் மற்றும் அவரது மனைவி ஜேன் இட்டோகியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு அந்நாளை மறக்கமுடியாத நாளாக மாற்றினர்.

தீபாவளி இரவில் ஏற்பட்ட சண்டை.. ஆடவர் ஒருவர் மருத்துவனையில் அனுமதி – ஒருவர் கைது