சிங்கப்பூர் ஹாலந்து வில்லேஜில் சண்டையில் ஈடுபட்ட 2 பேர் கைது..!

2 men arrested after late-night fight at Lorong Mambong in Holland Village
2 men arrested after late-night fight at Lorong Mambong in Holland Village

சிங்கப்பூர் ஹாலந்து வில்லேஜ்ஜில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு சண்டை ஏற்பட்டதை அடுத்து இரண்டு சிங்கப்பூர் ஆடவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 21) கைது செய்யப்பட்டதாக காவல்துறை செய்தி வெளியீட்டில் தெரிவித்துள்ளது.

அந்த சம்பவத்தில் தொடர்புடைய இருவருக்கும் 22 வயது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் மற்ற இனத்தை சேர்ந்தவரை தாக்கிப் பேசும் சம்பவம் ஏப்ரல் மாதத்தில் அதிகரிப்பு – அமைச்சர் சண்முகம்..!

கடந்த வெள்ளிக்கிழமை இரவு 10.50 மணியளவில் 21 லோராங் மாம்பொங்கில் (21 Lorong Mambong) நடைபெற்ற அந்த சம்பவத்தில் அவர்களுக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

அதே இடத்தில் பொதுமக்களுக்கு தொந்தரவு ஏற்படுத்தியதற்காக குடிபோதையில் இருந்த 26 வயதுடைய சிங்கப்பூர் ஆடவர் ஓருருவரையும் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

அவர் மீது விசாரணை நடத்தப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

மூன்று பேரும் ஒருவருக்கொருவர் தெரிந்தவர்கள், மேலும் அந்த இடத்தில் உள்ள உணவகங்களில் உணவருந்தினர் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட அவர்கள் பாதுகாப்பு இடைவெளி நடவடிக்கைகளை மீறுவதற்கும் விசாரிக்கப்படுவார்கள். போலீஸ் விசாரணை நடந்து வருகிறது.

தண்டனைச் சட்டத்தின் கீழ் பொது இடங்களில் சண்டைகளில் ஈடுபடுவோருக்கு, குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஒரு வருடம் வரை சிறைத்தண்டனை, S$5,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.

மதுபோதையில் பொது இடத்தில் மக்களுக்கு தொல்லை கொடுப்பவர்களுக்கு 6 மாதம் வரை சிறைத் தண்டனை, S$1,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

இதையும் படிங்க : வியக்கத்தக்க ‘நெருப்பு வளையம்’ கொண்ட சூரிய கிரகணம் – கண்டு ரசித்த மக்கள்..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook https://www.facebook.com/tamilmicsetsg/
?? Helo          http://m.helo-app.com/al/vppxQmsFr
?? Twitter      https://twitter.com/tamilmicsetsg
??Telegram  https://t.me/tamilmicsetsg
?? Sharechat https://sharechat.com/tamilmicsetsg