சுமார் S$167,000 மதிப்புள்ள சட்டவிரோத பொருட்கள் பறிமுதல் – இருவர் கைது

Google Streetview

சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் இரு சிங்கப்பூரர்கள் சிராங்கூனில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு (CNB) நடத்திய சோதனை நடவடிக்கையில் அவர்கள் டிச. 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் கைது செய்யப்பட்டனர்.

சிங்கப்பூரர்களில் மிகவும் போற்றப்படும் மனிதர் “பிரதமர் லீ” – ஆய்வின் தகவல்

CNB செய்திக்குறிப்பின்படி; மொத்தம் 1,867 கிராம் ஹெராயின், 216 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள், 68 ‘எக்ஸ்டஸி’ மாத்திரைகள் மற்றும் 12 எரிமின்-5 மாத்திரைகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன, அவைகளின் மொத்த மதிப்பு S$167,000 என மதிப்பிடப்பட்டுள்ளது.

நேற்று டிசம்பர் 15 அன்று, CNB அதிகாரிகள் சிராங்கூன் அவென்யூ 4க்கு அருகில் உள்ள குடியிருப்புப் வீட்டில் சோதனை நடத்தியதில் 37 வயது சிங்கப்பூர் நபர் கைது செய்யப்பட்டார்.

அதேபோல, இன்று டிசம்பர் 16ஆம் தேதி அதிகாலையில் தொடர் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது, இதில் CNB அதிகாரிகள் 59 வயது சிங்கப்பூர் நபரை அதே பகுதியில் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் போதைப்பொருள் நடவடிக்கைகள் தொடர்பான விசாரணைகள் தொடர்கின்றன.

உடல் நசுங்கி உயிரிழந்த வெளிநாட்டு கட்டுமான ஊழியருக்கு 3 குழந்தைகள் – உதவும் உள்ளங்கள் முன்வரலாம்!