போலீஸ் ரைடு வருவது குறித்து ஊழியர்களுக்கு தகவல் கொடுத்த இருவருக்கு அபாரதம்

சிங்கப்பூரில் போலீஸ் ரைடு வருவது குறித்து ஊழியர்களுக்கு தகவல் தெரிவிக்கும் வகையில் செய்தியை அனுப்பியதற்காக இரண்டு பொழுதுபோக்கு கடைகளின் மேலாளர்களுக்கு நேற்று (அக். 6) அபராதம் விதிக்கப்பட்டது.

இதில் டிஸ்கோ மற்றும் கரோக்கி கடையின் செயல்பாட்டு மேலாளர் கோஹ் வெய் ஜி என்பவருக்கு S$10,000 அபராதம் விதிக்கப்பட்டது.

சிங்கப்பூரில் பணிபுரியும் வெளிநாட்டு வீட்டுப் பணிப்பெண்களுக்கு ஓய்வு நாள் கட்டாயம் – MOM அறிவிப்பு

அவர் வேண்டுமென்றே அதிகாரிகளின் கடமையை செய்யவிடாமல் தடுத்த மூன்று குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார்.

மேலும் இதேபோன்ற இரண்டு குற்றச்சாட்டுகள் கவனத்தில் எடுத்து கொள்ளப்பட்டன.

அதே போல மற்றொரு இரவு நேர பொழுதுபோக்கு நிலையத்தின் பொது மேலாளர் ரேமண்ட் ரூபன் மெர்வின் இவருக்கு S$7,000 அபராதம் விதிக்கப்பட்டது.

இதுபோன்ற குற்றத்திற்கு ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

சிங்கப்பூரில் இருந்து கோவை வந்த 2 ஊழியர்கள் கைது – சிறையில் அடைப்பு