கோவிட்: சிங்கப்பூரில் மேலும் இருவர் மரணம்

(PHOTO: KHOO TECK PUAT HOSPITAL/FACEBOOK)

சிங்கப்பூரில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரண்டு கோவிட் நோயாளிகள் உயிரிழந்ததாக சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

அதனையும் சேர்த்து சிங்கப்பூரில் கிருமித்தொற்று காரணமாக ஏற்பட்ட மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 62ஆக உயர்ந்துள்ளது.

வெளிநாட்டு ஊழியர்களுக்கான வரி விலக்கு தள்ளுபடி இவ்வாண்டு இறுதி வரை நீட்டிப்பு.!

முதல் நபர்

அதில் ஒருவர் 84 வயது முதியவர், அவர் கோவிட் -19 தொற்றுக்கு எதிராக தடுப்பூசி போட்டுக்கொண்டவர்.

அவர் தொற்றுநோய் அறிகுறிகளுடன் கடந்த செப்டம்பர் 13 அன்று இங் டெங் ஃபாங் பொது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அதே நாளில் தொற்று உறுதி செய்யப்பட்டது என்று சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

மேலும், அவருக்கு இதய நோய், உயர் இரத்த அழுத்தம் மற்றும் ஹைப்பர்லிபிடேமியா போன்ற நாள்பட்ட பாதிப்புகள் இருந்ததாக MOH கூறியுள்ளது.

முதிர்ந்த வயது, அவரை கடுமையான நோய்க்கு ஆளாக்க வைத்திருக்கலாம் என்றும் அமைச்சகம் கூறியுள்ளது.

இரண்டாம் நபர்

இதில் உயிரிழந்த இரண்டாம் நபர், 85 வயது சிங்கப்பூரர் ஆவார். அவர் முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்.

அவருக்கு கடந்த செப்டம்பர் 16 அன்று கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டது. இரண்டு நாட்களுக்குப் பிறகு, அவர் கூ டெக் புவாட் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அவருக்கு மருத்துவ பிரச்சனைகள் எதுவும் இருந்ததாக தெரியவில்லை என்றும் MOH கூறியுள்ளது.

வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளில் 90 பேர் பாதிப்பு – விடுதிகளில் பாதிப்பு நிலவரம்