COVID-19 – மேலும் 2 புதிய சம்பவங்களை உறுதிசெய்துள்ள சிங்கப்பூர்…!

சிங்கப்பூரில் COVID-19 வைரஸ் தொற்றிலிருந்து மேலும் ஒரு நோயாளி குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சகம் (MOH) புதன்கிழமை (மார்ச் 4) தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில், இரண்டு புதிய சம்பவங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இன்றுவரை, சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் பாதித்த சம்பவங்களின் மொத்த எண்ணிக்கை 112ஆக உள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் சுமார் $27,000 மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்; வெளிநாட்டு கார் ஓட்டுநர் கைது..!

குணமடைந்தோர்

COVID-19 வைரஸ் தொற்றிலிருந்து மேலும் ஒரு நோயாளி குணமடைந்துள்ளார், இதுவரை 79 பேர் முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இன்னும் மருத்துவமனையில் உள்ள 33 நோயாளிகளில், பெரும்பாலானவர்கள் சீராகவும் அல்லது முன்னேற்றம் அடைந்தும் வருகின்றனர். தீவிர சிகிச்சை பிரிவில் ஏழு பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர் என்று MOH குறிப்பிட்டுள்ளது.

சம்பவம் 111

இதில் உறுதிப்படுத்தப்பட்ட நபர், 43 வயதான ஆண் சிங்கப்பூர் நிரந்தரவாசி.

இவர் COVID-19 பாதிக்கப்பட்ட நாடுகளுக்கும் பிராந்தியங்களுக்கும் சமீபத்திய பயணம் மேற்கொள்ளவில்லை.

ஆனால், இவர் கடந்த பிப்ரவரி 18 முதல் 21 வரை மலேசியாவில் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இவர் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையில் (NUH) சிகிச்சை பெற்று வருகிறார்.

சம்பவம் 112

இதில் உறுதிப்படுத்தப்பட்ட நபர், 62 வயதான சிங்கப்பூர் பெண்.

இவரும் COVID-19 பாதிக்கப்பட்ட நாடுகளுக்கும் பிராந்தியங்களுக்கும் சமீபத்திய பயணம் மேற்கொள்ளவில்லை.

இவருக்கு புதன்கிழமை காலை COVID-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

தற்போது தொற்று நோய்களுக்கான தேசிய மையத்தில் (NCID) தனிமைப்படுத்தப்பட்ட அறையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

சம்பவம் 94 உடன் இவருக்கு தொடர்புள்ளது, மேலும் கிரியேட்டிவ் ஓ ப்ரெஸ்கூலர்ஸ் பேயில் (31 இன்டர்நேஷனல் பிசினஸ் பார்க்) பணிபுரியும் கற்பித்தல் அல்லாத ஊழியர் இவர்.