செர்டிஸ் சிஸ்கோ ஊழியர் உட்பட சிங்கப்பூரில் 2 புதிய கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நபர்கள் உறுதி..!

Coronavirus in Singapore
2 new coronavirus cases in Singapore, including Certis Cisco employee

2 new coronavirus cases in Singapore: கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட மேலும் இரண்டு சம்பவங்களை இன்று திங்கள்கிழமை (பிப்ரவரி 10) சிங்கப்பூர் உறுதிப்படுத்தியுள்ளது, சுகாதார அமைச்சகம் (MOM) இதனை தெரிவித்துள்ளது.

இதன் மூலம் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 45 ஆக அதிகரித்துள்ளது. அவர்களில் 7 பேர் ஆபத்தான நிலையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூருக்கான பயணத் திட்டங்களை தாமதப்படுத்துமாறு குடிமக்களை வலியுறுத்திய இரு நாடுகள்..!

இருவரில், ஒருவர் செர்டிஸ் சிஸ்கோ (Certis Cisco) ஊழியர், மற்றொருவர் இரண்டு வயது சிறுமி.

இன்றைய நிலவரப்படி, ஒரு நோயாளி வீடு திரும்பியுள்ளார், இதன் மூலம் மொத்தம் ஏழு பேர் தற்போது வைரஸிலிருந்து முழுமையாக மீண்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

44 வது நபர்:

37 வயதான சிங்கப்பூர் நபர், செம்பவாங் டிரைவில் வசித்து வருகிறார், மேலும் பயா லெபாரில் (Paya Lebar) உள்ள 20 ஜலான் அஃபிஃபி (Jalan Afifi) என்ற இடத்தில் உள்ள செர்டிஸ் சிஸ்கோ (Certis Cisco) மையத்தில் பணிபுரிகிறார்.

இவர் சீனா சென்றதாக சமீபத்திய பயண வரலாறு இல்லை. தற்போது இவர் கூ டெக் புவாட் (Khoo Teck Puat) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

45 வது நபர்:

இரண்டு வயது சிங்கப்பூர் பெண். ஜனவரி 30 அன்று ஸ்கூட் விமானம் மூலம் வூஹானில் இருந்து அழைத்துவரப்பட்ட 92 சிங்கப்பூரர்களில் இவரும் ஒருவர். அந்தச் சிறுமி KK மகளிர் சிறார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

இதையும் படிங்க : கொரோனா வைரஸ்; சீனாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் உயர்வு..!

Source : CNA