திருமணம் – வரதட்சணை -விவாகரத்து – இந்திய வம்சாவளியை சேர்ந்த சிங்கப்பூர் காவலர் மீது 2 பெண்கள் குற்றச்சாட்டு: என்ன நடந்தது ?.

2 women cheated by indian origin cop at singapore case divorces

சிங்கப்பூரில் உள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த காவல் அதிகாரி ஒருவர், இரண்டு பெண்களைத் திருமணம் செய்து கொள்ள ஆயிரக்கணக்கான டாலர்கள் மதிப்பிலான வரதட்சணை வாங்கிவிட்டு, பின்னர் விவாகரத்து செய்துவிட்டு, பணம் மற்றும் மதிப்புமிக்க பொருட்களைத் திருப்பித் தரவில்லை என்ற குற்றச்சாட்டின் பேரில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

குற்றம் சாட்டப்பட்ட சிங்கப்பூர் காவல் படையின் உதவிக் கண்காணிப்பாளரான (ஏ.எஸ்.பி) முகமது ரஃபீக் அப்துல் காதர் தன்மீது உள்ள குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார், மேலும் அவரது முன்னாள் மனைவிகள் மற்றும் அவரது குடும்பத்தார்கள், தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதாகவும் மேலும் அவரிடமிருந்து அதிக பணம் பெற பார்க்கிறார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

அந்த குற்றம் சாட்டப்பட்ட காவலர் போலீஸ் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பதாக காவல் வட்டாரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ரஃபீக் 2014 ஆம் ஆண்டு இந்தியக் குடியுரிமை பெற்ற தஸ்லேமாவை மணந்ததாகவும், 150 சவரன் நகைகள் மற்றும் ₹ 500,000 (SGD 8,900) மதிப்புள்ள ஒரு கடிகாரத்தை வரதட்சணையாகப் பெற்றதாகவும், மேலும் திருமணமான சில நாட்களிலேயே, தஸ்லேமாவை இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பி, வரதட்சணையைத் திருப்பித் தராமல் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்ததாக தமிழ்நாட்டின் ஒரு உள்ளூர் செய்தி நிறுவனம் தெரிவித்தது.

 

அனால் ரஃபீக், அவர்கள் 2016 இல் சிங்கப்பூரில் திருமணம் செய்து கொண்டதாகவும், 2017 இல் விவாகரத்து செய்ததாகவும் தன் தரப்பில் கூறினார்.
மேலும் தங்கள் விவாகரத்துக்குப் பின், தஸ்லேமா வரதட்சணையைத் திரும்பப் பெற்று, இந்தியாவுக்குத் திரும்பிச் சென்றார் என்றும் , தற்போது வேறோரு திருமணம் செய்து கொண்டு ஒரு குழந்தையுடன் மகிழ்ச்சியாக உள்ளார் என்றும் ரஃபீக் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் ரஃபீக் தனது இரண்டாவது மனைவியான அமீர் நிஷாவை இந்திய குடிமகனாக 2020 இல் திருமணம் செய்து கொண்டார். மேலும் 101 சவரன் நகைகள், ஒரு ரோலக்ஸ் வாட்ச், ஒரு பிளாட்டினம் மோதிரம் மற்றும் ₹ 2,81,765 (SGD 5,000) ரொக்கம் வரதட்சணையாக பெற்றதாக கூறப்படுகிறது.

 

இங்கும், திருமணம் செய்த சிறிது நேரத்திலேயே மீண்டும் விவாகரத்து கோரி, வரதட்சணையை திருப்பித்தரவில்லை என்றும் இரண்டாவது மனைவியின் குடும்பத்தினர் தரப்பில் கூறப்பட்டது. இதையும் ரஃபீக் மறுத்துள்ளார். அவர் 2021 இல் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்ததாக தன் தரப்பில் கூறினார், இது இந்த ஆண்டின் தொடக்கத்தில் மட்டுமே இறுதி செய்யப்பட்டது என்றும் அவர் கூறினார். அவரின் இவ்விரு திருமணங்களும் சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்டவை என்றும் அவர் கூறியுள்ளார்.