சிங்கப்பூரில் COVID-19 விதிமுறைகளை மீறிய 20 மசாஜ் பார்லர்கள் தற்காலிகமாக மூடல்; வாடிக்கையாளர்களுக்கும் அபராதம்.!

20 massage outlets caught
Pic Credit: Unsplash

சிங்கப்பூரில் சமூக அளவில் கொரோனா வைரஸ் தொற்று சம்பவங்கள் குறைந்து வந்த நிலையில், சில கட்டுப்பாடுகள் கட்டுப்பாடுகள் கடந்த திங்கட்கிழமை (14-06-2021) முதல் தளர்த்தப்பட்டன.

முகப்பராமரிப்பு, நீராவிக் குளியல், மசாஜ் பார்லர்கள் போன்ற முகக்கவசம் பயன்படுத்த முடியாத சேவைகள் மீண்டும் தொடங்க  அனுமதி அளிக்கப்பட்டது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் பாதுகாப்பு விதிமுறைகளை மீறிய 20 மசாஜ் பார்லர்களை  தற்காலிகமாக 10 நாட்கள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

அங் மோ கியோ அவென்யூ 6-ல் தீ விபத்து- ஏழு பேர் மருத்துவமனையில் அனுமதி!

மசாஜ் பார்லர்களில், உடற்பிடிப்பாளர்கள் அல்லது வாடிக்கையாளர்கள் முகக்கவசம் அணிய தவறியதால் அங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை மீறிய நிலையங்கள் ஒவ்வொரு மசாஜ் பார்லருக்கும் 1000 வெள்ளியும் மற்றும் வாடிக்கையாளர்கள் ஒவ்வொருவருக்கும் 300 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மசாஜ் பார்லர்களில் கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடரும் என காவல்துறை தெரிவித்துள்ளது.

விதிமுறைகளை மீறும் மசாஜ் பார்லர்களுக்கு 10,000 வெள்ளி வரையிலான அபராதம், 6 மாத கால சிறைத் தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

ரெட்ஹில் சந்தை மற்றும் உணவு நிலைய கடைக்காரர்களுக்கு கட்டாய கிருமித்தொற்று பரிசோதனை.!