ரெட்ஹில் சந்தை மற்றும் உணவு நிலைய கடைக்காரர்களுக்கு கட்டாய கிருமித்தொற்று பரிசோதனை.!

Pic: Melvin Yong/FB

சிங்கப்பூரில் உள்ள ரெட்ஹில் சந்தை மற்றும் உணவு நிலையத்தின் (Redhill Market and Food Centre) கடைக்காரர்களுக்கு கட்டாய கொரோனா வைரஸ் பரிசோதனை நடத்தப்படும் என ராடின் மாஸ் தனித்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் மெல்வின் யோங் கூறியுள்ளார்.

ரெட்ஹில் சந்தை மற்றும் உணவு நிலையத்திற்கு கொரோனா வைரஸ் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சென்று திரும்பிய காரணத்திற்காக அங்குள்ள கடைக்காரர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்படுகின்றது.

கொரோனா தொற்றுக்கு உள்ளானவர் ரெட் ஹில் சந்தைக்கு சென்று வந்தது பற்றி சுகாதார அமைச்சகம் தமக்கு தகவல் கொடுத்திருப்பதாக திரு. யோங் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரில் உள்ள Outram கடைவீட்டில் தீ விபத்து; தீயணைப்பு வீரர்கள் இருவர் மருத்துவமனையில் அனுமதி.!

Black 84A ரெட்ஹில் லேனில், நேற்றைய தினமும, இன்றும் கட்டாய பரிசோதனை நடைபெறும் என்று திரு. யோங் முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இம்மாதம் 8ஆம் தேதியிலிருந்து 10ஆம் தேதி வரை காலை 7.30 மணியிலிருந்து 8.15 மணி வரை கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர் அங்கிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடைக்காரர்களுக்கு நடத்தப்படும் சோதனையை பார்வையிட்ட திரு. யோங் பரிசோதனையின் அவசியத்தைக் கடைக்காரர்கள் புரிந்து கொண்டதில் மகிழ்ச்சி அடைவதாகச் கூறினார்.

மேலும், சந்தையில் வேலை செய்வோர் மற்றும் வாடிக்கையாளர்கள் ஆகியோரின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு முன்னெச்சரிக்கையாகப் பரிசோதனை நடத்தப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

புதிய நோய்த்தொற்று குழுமத்துடன் தொடர்பு; புக்கிட் மேரா வியூ சந்தை மேலும் சில நாட்களுக்கு மூடல்.!