புதிய நோய்த்தொற்று குழுமத்துடன் தொடர்பு; புக்கிட் மேரா வியூ சந்தை மேலும் சில நாட்களுக்கு மூடல்.!

Bukit Merah closure extended
Pic: Nuria Ling/TODAY

சிங்கப்பூரில் உள்ள புக்கிட் மேரா வியூ (Bukit Merah View) சந்தை, உணவங்காடி நிலையம் (Hawker Centre) கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 13) முதல் செவ்வாய்க்கிழமை (ஜூன் 15) வரை சுத்திகரிப்பு பணிகளை மேற்கொள்ளுவதற்காக மூடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், சிங்கப்பூரில் நேற்று சமூக அளவில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட 14 பேரில் 9 பேருக்கு புக்கிட் மேரா வியூ சந்தை நோய் தொற்றுக் குழுமத்துடன் தொடர்பில் இருப்பது தெரியவந்தது.

புக்கிட் மேரா வியூ சந்தை கடைக்காரர்களுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை.!

தற்போது புதிதாக உறுதி செய்யப்பட்டுள்ளவர்களையும் சேர்த்து, அந்தக் குழுமத்துடன் தொடர்புடைய கிருமித்தொற்று சம்பவங்களின் எண்ணிக்கை 25ஆக உயர்ந்துள்ளது.

இதனையடுத்து, நேற்று (ஜூன் 15) மீண்டும் திறக்கப்படவிருந்த புக்கிட் மேரா வியூ சந்தை, உணவங்காடி நிலையம் மேலும் சில நாட்களுக்கு மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மூடப்பட்ட புக்கிட் மேரா வியூ சந்தை, உணவங்காடி நிலையம் இந்த மாதம் 26ம் தேதி மீண்டும் திறக்கப்படும்.

சந்தையுடன் தொடர்புடையவர்கள் மூலம் கிருமித்தொற்று ஏற்படக்கூடும் என்பதால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.

சிங்கப்பூர் வேலை வாய்ப்புக்காகக் காத்திருக்கும் வெளிநாட்டினர்… தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வாய்ப்பு என தகவல்!