ஆசிய இளைஞர் பாரா விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களைக் குவித்த சிங்கப்பூர் அணி!

Photo: Prime Minister Lee Hsien Loong Official Facebook Page

ஆசிய அளவில் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கும் ஆசிய இளைஞர் பாரா விளையாட்டுப் போட்டிகள் (Bahrain 2021 Asian Youth Para Games) நடைபெற்று வருகின்றது. அதன் தொடர்ச்சியாக, நடப்பாண்டில் ஆசிய இளைஞர் பாரா விளையாட்டுப் போட்டிகள் பஹ்ரைன் நாட்டின் மனமா (Manama) நகரில் டிசம்பர் 2- ஆம் தேதி அன்று கோலாகலமாகத் தொடங்கியது. இப்போட்டிகளில் 30- க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்துக் கொண்டனர்.

சிங்கப்பூரில் மேலும் 662 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி!

டிசம்பர் 6- ஆம் தேதி வரை நடைபெற்ற இப்போட்டிகளில் தடகளம், டேபிள் டென்னிஸ், பேட்மிண்டன், நீச்சல், ஈட்டி எறிதல் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளில் பங்கேற்று வீரர், வீராங்கனைகள் பதக்கங்களைக் குவித்தனர்.

குறிப்பாக, சிங்கப்பூர் அணியைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் இப்போட்டிகளில் தங்களது திறமைகளைச் சிறப்பாக வெளிப்படுத்தி 10 பதக்கங்களை வென்று அசத்தியுள்ளனர். இதில் 5 தங்கம், 3 வெள்ளி, 2 வெண்கலம் பதக்கங்கள் அடங்கும்.

சிங்கப்பூரில் வெளிநாட்டினர் எளிதாக தொழில் செய்ய 5 சிறு வணிக யோசனைகள்!

இந்த நிலையில், பதக்கங்களைக் குவித்த சிங்கப்பூர் அணியைச் சேர்ந்த வீரர்களுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது பாராட்டுகளை சமூக வலைத்தளங்கள் மூலம் தெரிவித்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக, சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங், சிங்கப்பூர் வீரர், வீராங்கனைக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.