சிங்கப்பூரில் மேலும் 662 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி!

Photo: Ooi Boon Keong/TODAY)

சிங்கப்பூரில் தினசரி கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று (06/12/2021) வெளியிட்டிருந்த செய்திக் குறிப்பில், “சிங்கப்பூரில் நேற்று (06/12/2021) மதியம் நிலவரப்படி, மேலும் 662 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது. உள்ளூர் அளவில் 651 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதில் சமூக அளவில் 638 பேருக்கும், வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளில் 13 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதிச் செய்யப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து வந்த 11பேருக்கும் கொரோனா உறுதிச் செய்யப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,69,873 ஆக உயர்ந்துள்ளது.

சிங்கப்பூரில் வெளிநாட்டினர் எளிதாக தொழில் செய்ய 5 சிறு வணிக யோசனைகள்!

கொரோனா பாதிப்பால் சிகிச்சைப் பலனின்றி மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்கள் 81 முதல் 97 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர். சிங்கப்பூரில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 763 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 850 பேர் மருத்துவமனைகளில் பொதுவார்டில் சிகிச்சைப் வருகின்றனர். இதில் 142 பேர் ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், 53 பேர் ஐ.சி.யூ.வில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

புலாவ் உபின் தீவில் வசிக்கும் 30க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு ART கருவிகளை விநியோகிக்கும் தபால்காரர்

கடந்த நாளில் மொத்தம் 1,198 பேர் நோய்த்தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதில் 182 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆவர்.

வெளிநாடுகளில் இருந்து வந்த இரண்டு பேருக்கு ‘ஓமிக்ரான்’ நோய்த்தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது”. இவ்வாறு சுகாதாரத்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.