சிங்கப்பூரில் 802 கோவிட்-19 இறப்புகளில் முழுமையாக தடுப்பூசி போடாத 555 பேர் மரணம்

(PHOTO: Suhaimi Abdullah/Getty Images)

சிங்கப்பூரில் கடந்த 2021ஆம் ஆண்டில் மட்டும் மொத்தம் 802 பேர் கோவிட் -19 காரணமாக இறந்துள்ளனர் என்று சுகாதார அமைச்சர் ஓங் யே குங் தெரிவித்துள்ளார்.

அதில் 555 பேர் முழுமையாக தடுப்பூசி போடாதவர்கள் என்றும் அமைச்சர் இன்று திங்கள்கிழமை (ஜனவரி 10) குறிப்பிட்டுள்ளார்.

இந்திய ஊழியருக்கு அடித்த லாட்டரி: இந்திய மதிப்பில் “500 மில்லியன்” – ஓட்டுநர், கோடீஸ்வரர் ஆன மகிழ்ச்சி!

தடுப்பூசி போடாதவர்கள் மக்கள் தொகையில் சிறிய விகிதத்தில் இருந்தாலும், அவர்களில் 70 சதவீத பேர் உயிரிழந்துள்ளதாக அவர் நாடாளுமன்றத்தில் கூறினார்.

அதில் மீதமுள்ள 247 பேர் உள்நாட்டில் கிடைக்கும் பல்வேறு வகையான தடுப்பூசிகளை போட்டுக்கொண்டதாகவும் திரு ஓங் குறிப்பிட்டார்.

18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் சுமார் 132,000 பேர் இன்னும் தடுப்பூசி போடப்படாமல் உள்ளனர். சுமார் 300 பேர் மருத்துவ ரீதியாக தகுதியற்றவர்கள், என்று நாடாளுமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.

இந்தியா செல்லும் பயணியா நீங்க? – தொற்று ஆபத்துள்ள நாடுகளின் பட்டியலை வெளியிட்டது “இந்தியா”