2022க்கான கல்வி ஆண்டின் வேலை மற்றும் விடுமுறை நாட்கள் அறிவிப்பு

கல்வி அமைச்சின்கீழ் இயங்கும் அனைத்து பள்ளிகளுக்கும் 2022ஆம் ஆண்டு ஜனவரி 4ல் தொடங்கி நவம்பர் 18 வரை கல்வி ஆண்டு நடைபெறும்.

இறுதி கல்விப் பருவம் 2022 அக்டோபர் 28ம் தேதியுடன் முடிவடையும் என்றும் கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

மற்றவருடைய தடுப்பூசி சான்றிதழை சமர்ப்பிப்பது சட்டவிரோதமானது – பிடிபட்டால் கடுமையான தண்டனை

சாதாரண நிலை எழுத்துத் தேர்வுக்காகப் பள்ளிக்ககூடங்கள் பயன்படுத்தப்படும் என்பதால் இந்த தேதி இறுதி செய்யப்பட்டதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

தொடக்கக் கல்லூரி மற்றும் மில்லேனியம் கல்வி நிறுவனத்தின் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்வி ஆண்டு 2022 பிப்ரவரி 7ம் தேதி முதல் நவம்பர் 25ம் தேதி வரை நீடிக்கும்.

2ம் ஆண்டு மாணவர்களுக்கு ஜனவரி 10ம் தேதியே தாெடங்கும் என்றும், ஆனால் இரு ஆண்டு மாணவர்களுக்கும் நவம்பர் 25ம் தேதி வரையே என்றும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும், 3ம் ஆண்டு மாணவர்களுக்கான கல்வி ஆண்டு ஜனவரி 10ல் தொடங்கி “ஏ” நிலை தேர்வுடன் முடிவடையும் என்றது கல்வி அமைச்சு.

விடுமுறை

பின்பு தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளிகளுக்கான விடுமுறை மார்ச் 12 முதல் மார்ச் 20 வரை என்றும், மே 28 முதல் ஜுன் 26 வரை என்றும், செப்டம்பர் 3 முதல் செப்டம்பர் 11 வரை என்றும், நவம்பர் 19 முதல் டிசம்பர் 31 வரை என்றும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

தொடக்கக் கல்லூரி, மில்லினிய நிறுவன இறுதி ஆண்டு விடுமுறை “ஏ” நிலை தேர்வுக்குப் பின் தொடங்கும்.

அவ்விடுமுறையானது தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளிகளுக்கான விடுமுறை போன்றே இருக்கும் எனவும், ஆண்டிறுதி விடுமுறை மட்டும் நவம்பர் 26ல் தொடங்கும் என அமைச்சு அறிவித்துள்ளது.

கட்டுப்பாடுகள் தளர்வு – சிங்கப்பூரில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்கள் பெரும் மகிழ்ச்சி!