கட்டுப்பாடுகள் தளர்வு – சிங்கப்பூரில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்கள் பெரும் மகிழ்ச்சி!

All foreigners can automated lanes singapore travel
Pic: Foreign workers Singapore risk

கோவிட்-19 தொற்றுப்பரவலின் காரணமாக போடப்பட்ட கட்டுபாடுகளில் சில தளர்வுகள் நடைமுறைக்கு வந்துள்ளதால், சிங்கப்பூரில் உள்ள வெளிநாட்டவர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

பாெதுவாக கோவிட்-19 சூழ்நிலையில், சிங்கப்பூரிலிருந்து மலேசியா செல்பவர்கள் அங்குள்ள ஹோட்டலில் 2 வாரம் தனிமைப்படுத்தப்படும் உத்தரவு தளர்வாக்கப்பட்டுள்ளதால் சிங்கப்பூரில் உள்ள மலேசியர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

பெரும் பாதிப்புகளை எதிர்கொள்ள தயாராகும் சிங்கப்பூர்! மாறும் பருவநிலையே காரணம்

மேலும் இதேபோன்று மலேசியாவிலிருந்து சிங்கப்பூர் வருபவர்களுக்கும், சிங்கப்பூர் அரசு இதே தளர்வை நடைமுறைப்படுத்தப்படும் என கருதுகின்றனர்.

தனிமைப்படுத்தப்படும் இந்த உத்தரவை எளிமைப்படுத்தி மலேசியப் பிரதமர் முகைதீன் யாசின் வெளியிட்ட இந்த அறிவிப்பு, சிங்கப்பூரிலிருந்து நாடு திரும்ப ஆசைப்படும் மலேசியர்களுக்கு பயனளிக்கும் என இஸ்கந்தர் மாட் ஜூசோ எனும் தாெழில்நுட்பர் கூறினார்.

மேலும், தாம் இரு தடுப்பூசிகளையும் போட்டுக் கொண்டதையும் தெரிவித்தார். இத்தளர்வினால், தங்களின் பணம் சேமிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல், தங்களின் குடும்பங்களுடன் செலவிடும் நேரமும் அதிகரிக்கிறது என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.

கடந்த ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து இதுவரை, தானும் தன் குடும்பத்தை சந்திக்க செல்ல இயலவில்லை என்று வருத்தத்துடன் கூறினார் திருவாட்டி நர்பேஸீரா பசருதீன் (வயது 34).

சிங்கப்பூரில் உள்ள ஒரு விரைவு உணவகத்தில் கிளை மேலாளராக பணிபுரியும் இவர், கோவிட்-19 கட்டுபாடுகளால் தன் கணவரையும், தனது நான்கு இளம் பிள்ளைகளையும் காண முடியாமல் தவிப்பதாகவும், இதுப்போன்ற தளர்வுகள் தன்னைப் போன்றவர்களுக்கும் பயனளிக்கும் என்று கூறினார்.

இதேபோன்று ஆகஸ்ட் 6 முதல் ஏற்கனவே ஜோகூர்பாரு ஹோட்டலில் தனிமையில் இருக்கும் சுரேஷ் (வயது 33) என்பவர், இந்த புதிய உத்தரவினால் தனது தனிமைப்படுத்தும் உத்தரவு காலம் குறைக்கப்படும் என எதிர்ப்பார்த்திருக்கிறார்.

கட்டுமான ஊழியர்களுக்கு கட்டாயமாகும் “ART” சோதனை.!