ஆசிய தடகளப் போட்டி- சிங்கப்பூருக்கு எத்தனையாவது இடம் தெரியுமா?

ஆசிய தடகளப் போட்டி- சிங்கப்பூருக்கு எத்தனையாவது இடம் தெரியுமா?
Photo: Singapore Athletics

 

2023- ஆம் ஆண்டிற்கான ஆசிய தடகளப் போட்டி, தாய்லாந்து நாட்டின் பாங்காக் நகரில் உள்ள சுபச்சலசை தேசிய மைதானத்தில் (Suphachalasai National Stadium) கடந்த ஜூலை 12- ஆம் தேதி முதல் ஜூலை 16- ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில், ஜப்பான், சீனா, இந்தியா, பாகிஸ்தான், மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, இலங்கை, பிலிப்பைன்ஸ், கத்தார், வியட்னாம், ஈரான், குவைத், சவூதி அரேபியா, உஸ்பெகிஸ்தான், கஜகஸ்தான், தென் கொரியா உள்ளிட்ட 20- க்கும் மேற்பட்ட நாடுகள் கலந்து கொண்டனர்.

“சிங்கப்பூர் அரசுமுறைப் பயணம் மிகவும் உபயோகமாக அமைந்தது”- தமிழக அமைச்சர் பெருமிதம்!

ஆண்கள், பெண்கள் என தனித்தனிப் பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளில் ஏராளமான வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டு பதக்கங்களைக் குவித்துள்ளனர்.

பதக்கப் பட்டியலில், 16 தங்கம், 11 வெள்ளி, 10 வெண்கலம் என மொத்தம் 37 பதக்கங்களுடன் ஜப்பான் முதலிடத்திலும், 8 தங்கம், 8 வெள்ளி, 6 வெண்கலம் என 22 பதக்கங்களுடன் சீனா இரண்டாவது இடத்திலும், 6 தங்கம், 12 வெள்ளி, 9 வெண்கலம் என 27 பதக்கங்களுடன் இந்தியா மூன்றாவது இடத்திலும் உள்ளது.

ஆசிய தடகளப் போட்டியில் இரண்டாவது தங்கத்தை வென்று சாந்தி பெரேரா அசத்தல்!

சிங்கப்பூர் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் தலா 2 தங்கப் பதக்கங்களை மட்டுமே வென்று பதக்கப் பட்டியலில் 6வது இடத்தில் உள்ளனர்.

குறிப்பாக, சிங்கப்பூரைச் சேர்ந்த தடகள வீராங்கனை சாந்தி பெரேரா, 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் போட்டிகளில் கலந்து கொண்டு இரண்டு தங்கப் பதக்கங்களை வென்று அசத்தியுள்ளார். அவருக்கு சிங்கப்பூரைச் சேர்ந்த தலைவர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.