அதிபர் தேர்தல்- தயார் நிலையில் வாக்குப்பதிவு மையங்கள்!

வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?- சிங்கப்பூர் தேர்தல் துறை வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!
Photo: Google Street View

 

சிங்கப்பூரின் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு நாளை (செப்டம்பர் 01) நடைபெறுகிறது. காலை 08.00 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு இரவு 08.00 மணி வரை நடைபெறும் என்று சிங்கப்பூர் தேர்தல் துறை அறிவித்துள்ளது.

பாஸ்போர்ட்டில் மாற்றம் செய்து சிங்கப்பூருக்கு செல்ல முயன்ற இளைஞர் கைது!

சுமார் 2.7 மில்லியனுக்கும் அதிகமான வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். வாக்குச்சீட்டு முறையில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளதால் விரிவான ஏற்பாடுகளை தேர்தல் துறை தெரிவித்துள்ளது. குறிப்பாக, முதியவர்கள், சிறப்புத் தேவையுடையோர் ஆகியோர் எளிதில் சென்று வாக்களிக்கும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நடக்க இயலாத முதியவர்களின் வசதிக்காக, வாக்குப்பதிவு மையங்களில் சக்கர நாற்கலிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. வாக்காளர்களுக்கு உதவுவதற்காக அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆங்காங்கே வாக்களிப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய அறிவிப்புகள் ஆங்கிலம், தமிழ் உள்ளிட்ட மொழிகளில் வைக்கப்பட்டுள்ளன.

ஹைதராபாத்தில் இருந்து சிங்கப்பூர் செல்லும் பயணிகளுக்கான அதிரடி ஆஃபரை அறிவித்தது சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்!

அனைவரும் அதிபர் தேர்தலில் வாக்களிக்க ஏதுவாக, தேர்தல் தினமான நாளை (ஆகஸ்ட் 31) சிங்கப்பூர் முழுவதும் அரசு பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல், வாக்கு மையங்களில் வாக்காளர்களுக்கான அனைத்து அடிப்படை வசதிகளையும் தேர்தல் ஆணையம் செய்துள்ளது. வாக்குப்பதிவு மையங்களுக்கு வாக்குப்பெட்டிகள் கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில், அதிபர் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது.