அடுத்தாண்டு நடைபெறவுள்ள ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்குமாறு சிங்கப்பூருக்கு பிரேசில் அழைப்பு!

அடுத்தாண்டு நடைபெறவுள்ள ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்குமாறு சிங்கப்பூருக்கு பிரேசில் அழைப்பு!
File Photo

 

ஜி20 உச்சி மாநாட்டை நடத்துவதற்கான தலைமை பொறுப்பை ஏற்றுள்ள பிரேசில், ரியோ டி ஜெனிரோ (Rio de Janeiro) நகரில் அடுத்தாண்டு 2024 நவம்பர் 18, 19 ஆகிய தேதிகளில் நடத்தவுள்ளது. இதையொட்டி, ஜி20 நாடுகளின் அமைச்சர்கள் பங்கேற்கும் பல்வேறு கூட்டங்கள், நடப்பாண்டு டிசம்பர் மாதம் முதல் அடுத்தாண்டு டிசம்பர் மாதம் வரை நடைபெறவுள்ளது.

சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சரைச் சந்தித்த குஜராத் முதலமைச்சர்!

2024 ஜி20 உச்சிமாநாடு, ஜி20 கூட்டங்களை பிரேசில் தலைமையேற்று நடத்தவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை பிரேசில் அரசு செய்து வருகிறது. இந்த நிலையில், அடுத்தாண்டு நடைபெறவுள்ள ஜி20 உச்சி மாநாடு, ஜி20 கூட்டங்களில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொள்ளுமாறு சிங்கப்பூர் அரசுக்கு, பிரேசில் அரசு அழைப்பு விடுத்துள்ளதாக சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகம் மற்றும் நிதியமைச்சகம் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்குமாறு சிங்கப்பூர் அமைச்சர்கள், தொழில் நிறுவனங்களுக்கு குஜராத் முதலமைச்சர் நேரில் அழைப்பு!

ஜி20 உறுப்பு நாடுகளில் சிங்கப்பூர் இல்லாத போதிலும், சுமார் 10 ஆண்டுகளாக ஜி20 உச்சி மாநாட்டில் சிங்கப்பூர் அழைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், சிங்கப்பூருக்கு பிரேசில் அழைப்பு விடுத்துள்ள நிலையில், ஜி20 உச்சி மாநாடு மற்றும் ஜி20 கூட்டங்களில் பங்கேற்க பிரேசில் விடுத்த அழைப்பு ஏற்றுக் கலந்துக் கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.