சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சரைச் சந்தித்த குஜராத் முதலமைச்சர்!

சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சரைச் சந்தித்த குஜராத் முதலமைச்சர்!
Photo: Gujarat CM Bhupendra Patel

 

அரசுமுறைப் பயணமாக, சிங்கப்பூருக்கு வந்துள்ள குஜராத் முதலமைச்சர் பூபேந்திர பட்டேல், டிசம்பர் 01- ஆம் தேதி காலை 11.00 மணிக்கு சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணனை நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது, வரும் ஜனவரி 10- ஆம் தேதி முதல் ஜனவரி 12- ஆம் தேதி வரை இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்தார்.

சிங்கப்பூரில் இரு இந்தியர்களுக்கு சிறை – பலே திட்டம்.. உதவி செய்தது அம்பலம்

இந்த சந்திப்பு குறித்து சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “குஜராத் ஒரு அபரிமிதமான பொருளாதார ஆற்றலைக் கொண்ட, ஆற்றல் மிக்க புதுமையான மக்களைக் கொண்டுள்ளது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, பசுமை கப்பல் மற்றும் ஃபின்டெக் ஆகியவற்றில் ஒத்துழைப்பை ஆராய்வது குறித்து நாங்கள் விவாதித்தோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்திய ஊழியர்களுக்கு அனுமதி… 400க்கும் மேற்பட்ட இந்திய உணவகங்கள் பயன்பெறும்

இந்த சந்திப்பின் போது, குஜராத் மாநில அரசின் உயரதிகாரிகள், இந்திய தூதரக அதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.