இந்திய ஊழியர்களுக்கு அனுமதி… 400க்கும் மேற்பட்ட இந்திய உணவகங்கள் பயன்பெறும்

Singapore allows restaurants to hire Indian cooks
AFP

சிங்கப்பூரில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட “கிரேட் இந்தியன் உணவுத் திருவிழா” மீண்டும் அதிகாரபூர்வமாக தொடங்கப்பட்டுள்ளது.

நேற்று நடந்த அதிகாரபூர்வ தொடங்க விழாவில் மனிதவள அமைச்சர் டான் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

சிங்கப்பூரில் வசிக்கும் இந்தியர்களுக்கு குட் நியூஸ்.. சிங்கப்பூரில் இருந்து மலேசியா.. படையெடுக்கும் கூட்டம்

இதில் முக்கியமாக, சிங்கப்பூர் இந்திய உணவகங்கள் சங்கத்தோடு இணைந்து மனிதவள அமைச்சகம், இந்திய உணவக ஊழியர்களை தொழிற்துறை சாரா வேலைகள் பட்டியலில் சேர்க்க முடிவு செய்துள்ளது.

அவ்வாறு செய்யப்பட்டால், சிங்கப்பூரில் உள்ள இந்திய உணவகங்கள் இந்தியா, இலங்கை மற்றும் பங்களாதேஸ் சமையல் ஊழியர்களை வேலைக்கு எடுக்கலாம்.

இதனால் சுமார் 400 க்கும் மேற்பட்ட இந்திய உணவகங்கள் பயன்பெறும் என சொல்லப்பட்டுள்ளது.

அதிகமான இந்திய ஊழியர்களுக்கு இதனால் வேலை கிடைக்கும் என்றும், உணவகங்களும் பயன்பெறும் எனவும் சொல்லப்பட்டுள்ளது.

கடந்த செப். மாதம் இதற்காக விண்ணப்பிக்கலாம் என உணவகங்களுக்கு அறிவிப்பு செய்யப்பட்டது.

வெளிநாட்டு ஊழியர்கள் பற்றாக்குறை… உணவகங்களில் இந்திய ஊழியர்களை வேலைக்கு எடுக்க அனுமதி – செப். முதல் விண்ணப்பிக்கலாம்

செப். 1 முதல் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் – இந்திய ஊழியர்களுக்கு ஹோட்டல் துறையில் வேலை அனுமதி