சிங்கப்பூரில் இருந்து வந்த பயணியிடம் 207 கிராம் தங்கம் பறிமுதல்!

சிங்கப்பூரில் இருந்து வந்த பயணியிடம் 207 கிராம் தங்கம் பறிமுதல்!
Photo: Trichy Customs

 

திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு வரும் வெளிநாட்டு பயணிகள் தங்கம், போதைப்பொருட்களைக் கடத்தி வருவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் திருச்சி மண்டல வான் நுண்ணறிவுப் பிரிவுச் சுங்கத்துறை அதிகாரிகள், வெளிநாடுகளில் இருந்து விமான நிலையத்திற்கு வரும் பயணிகளையும், உடமைகளையும் சோதனை செய்து வருகின்றனர். அத்துடன், விமான நிலையம் முழுவதையும் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.

லிட்டில் இந்தியாவில் சாதத்துக்கு கொடுக்கும் வெறும் குழம்புக்கு கட்டணம் வசூலிக்கும் இந்திய உணவகம் – அப்செட்-ஆன குடும்பம்

அதைத் தொடர்ந்து, சிங்கப்பூரில் இருந்து திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த பயணிகளை வான் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் அதிரடியாக சோதனை செய்தனர். அதில், ஒரு பயணி கொண்டு வந்திருந்த எல்இடி லைட்டை பிரித்து பார்த்தனர். அதில், தங்கக் கட்டிகள் மறைத்து வைத்துக் கடத்தி வந்தது தெரிய வந்தது.

பலத்த சத்தத்துடன் 11வது மாடியில் இருந்து விழுந்த ஆடவர் – துணி காயப்போடும் ரேக்கில் சிக்கி மரணம்

சுமார் ரூபாய் 9.54 லட்சம் மதிப்பிலான 207 கிராம் தங்கத்தைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், அந்த பயணியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். பின்னர், திருச்சி விமான நிலைய காவல் நிலையத்தில், அந்த பயணியை ஒப்படைத்தனர்.