“22 வயது இளைஞரை காணவில்லை”- தகவல் கொடுக்குமாறு சிங்கப்பூர் காவல்துறை வேண்டுகோள்!

Photo: Singapore Police Force Official Twitter Page

சிங்கப்பூர் காவல்துறை (Singapore Police Force) தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “சிங்கப்பூரில் வசித்து வந்த 22 வயதான இளைஞரை நவம்பர் 20- ஆம் தேதி அன்று மதியம் 02.30 மணி முதல் காணவில்லை. இவர் கடைசியாக, பிளாக் 301டி அன்சோர்வாலே (Blk 301D Anchorvale Dr) என்ற இடத்தில் இருந்துள்ளார். அப்போது, பழுப்பு நிற சட்டை, நீல நிற ஷார்ட்ஸ் (Blue Shorts) மற்றும் காலணியை அணிந்திருந்துள்ளார்.

உலகக்கோப்பை கால்பந்து போட்டியையொட்டி, நாமக்கல்லில் இருந்து கத்தாருக்கு 1.5 கோடி முட்டைகள் ஏற்றுமதி!

இந்த இளைஞரைப் பற்றி பொதுமக்களுக்கு தகவல் கிடைத்தாலோ (அல்லது) இளைஞரை யாராவது பார்த்தாலோ உடனடியாக சிங்கப்பூர் காவல்துறையின் 999 என்ற தொலைபேசி எண்ணை தொடர்புக் கொண்டு தகவல் கொடுக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்படுகிறது”. இவ்வாறு ட்விட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ட்விட்டர் பதிவுடன் காணாமல் போனவரின் புகைப்படத்தையும் காவல்துறை பதிவேற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.