“தகாத வேலைகளில் ஈடுபட்டது… தவறான படங்களை வைத்திருந்தது..” – 23 பேரை தூக்கிய போலீஸ்

"தகாத வேலைகளில் ஈடுபட்டது... தவறான படங்களை வைத்திருந்தது.." - 23 பேரை தூக்கிய போலீஸ்
SPF

குழந்தைகளை குறிவைத்து இணையத்தில் தகாத வேலைகளை செய்து வந்த 23 பேர் போலீசாரிடம் பிடிபட்டுள்ளனர்.

பாலியல் ரீதியாக செயல்பட்ட அவர்களுக்கு வயது 22 முதல் 61க்கு உட்பட்டு இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் மேற்கொண்ட ஐந்து வார கால சோதனை நடவடிக்கையின் போது அவர்கள் பிடிபட்டனர்.

சிங்கப்பூர் முழுவதும் பல இடங்களில் அந்த சோதனைகளை மேற்கொண்டதாக சிங்கப்பூர் போலீஸ் படை (SPF) இன்றைய மார்ச் 27 செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.

இதில் அவர்கள் பயன்படுத்திய கம்ப்யூட்டர், கைபேசி, ஹார்ட் டிஸ்க்குகள் உள்ளிட்ட அனைத்து மின்னணு சாதனங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

அவர்கள் ஆபாசம் தொடர்பானவற்றை வைத்திருந்ததாகவும், அதனை பரிமாற்றம் செய்ததாகவும் கூறப்படுகிறது.

அவர்களிடம் விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.