சிங்கப்பூரில் மொத்தம் 236 சந்தேக நபர்கள் மீது போலீசார் விசாரணை

508 nabbed illegal moneylending and scams
Photo: Getty

சிங்கப்பூரில் மொத்தம் 163 ஆண்களும், 73 பெண்களும் மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகத்தின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதில் பாதிக்கப்பட்டவர்கள் மொத்தம் S$6.1 மில்லியனுக்கும் அதிகமான தொகையை இழந்துள்ளதாகவும் போலீசார் வெள்ளிக்கிழமை (நவம்பர் 19) தெரிவித்தனர்.

சிங்கப்பூர்-மலேசியா இடையே நில வழி பயணம்: குடும்பங்களைப் பிரிந்து வாடும் ஊழியர்களுக்கு முன்னுரிமை!

அந்த 236 சந்தேகநபர்களும் 14 முதல் 78 வயதுக்கு உட்பட்டவர்கள், மேலும் அவர்கள் 770க்கும் மேற்பட்ட மோசடி வழக்குகளில் ஈடுபட்டதாக நம்பப்படுகிறது.

மோசடிகள் முக்கியமாக இணைய காதல் மோசடிகள், இ-காமர்ஸ் மோசடிகள், சீனா மற்றும் அரசாங்க அதிகாரிகள்போல் ஆள்மாறாட்ட மோசடிகள், அத்துடன் முதலீடு, வேலை, வணிக மின்னஞ்சல் மற்றும் கடன் மோசடிகளும் அதில் அடங்கும்.

கடந்த நவம்பர் 6 மற்றும் நவம்பர் 18க்கு இடையில் வர்த்தக விவகார துறை மற்றும் ஏழு போலீஸ் தரைப் பிரிவுகள் மேற்கொண்ட இரண்டு வார நடவடிக்கையைத் தொடர்ந்து அவர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

இந்த சந்தேக நபர்கள் ஏமாற்றுதல், பணமோசடி செய்தல் அல்லது உரிமம் இல்லாமல் பணம் செலுத்தும் சேவைகளை வழங்குதல் போன்ற குற்றங்களுக்காக விசாரிக்கப்படுகிறார்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.

குடியிருப்பில் இறந்து கிடந்த ஆடவர்: இறந்து சில நாட்களாகியிருக்கலாம் – காவல்துறை