மலேசியா-சிங்கப்பூர் விமான சேவை: 6 விமான நிறுவனங்கள் வழங்கும் – அனுமதி விண்ணப்பம் எப்போது?

(Photo: TODAY)

மலேசியா-சிங்கப்பூர் இடையே தனிமைப்படுத்தல் இல்லாத விமானப் பயணத் திட்டம் வரும் நவம்பர் 29ஆம் தேதி தொடங்கும் என்று அறிவிப்பட்டுள்ளது.

இந்நிலையில், ​​பயணிகள் குறிப்பிட்ட ஆறு விமான சேவைகளைத் தேர்வுசெய்ய முடியும்.

சிங்கப்பூரில் மேலும் ஒரு வெளிநாட்டு ஊழியருக்கு மரண தண்டனை விதிப்பு

ஏர் ஏசியா, ஜெட்ஸ்டார் ஆசியா, மலேசியா ஏர்லைன்ஸ், மலிண்டோ ஏர், ஸ்கூட் மற்றும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் ஆகியவை தலா ஒரு தினசரி சேவையை வழங்கும்.

இதனை சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் (CAAS) வியாழக்கிழமை (நவம்பர் 18) தெரிவித்துள்ளது.

அதே போல, சிங்கப்பூர்-மலேசியா VTL பயணத் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் வரும் நவம்பர் 22 முதல் தொடங்கும் என்று CAAS தெரிவித்துள்ளது.

மலேசியாவின் குடிநுழைவு ஆணையத்தின்படி, சிங்கப்பூருக்கும் கோலாலம்பூருக்கும் இடையில் நியமிக்கப்பட்ட சேவைகளை இயக்கும் விமானங்களின் திறன் மற்றும் விமான வகைக்கு வரம்பு இல்லை என்று தெரிவித்துள்ளது.

சிங்கப்பூருக்குள் நுழைய விரும்பும் நீண்ட கால அனுமதி வைத்திருப்பவர்கள் மற்றும் குறுகிய கால வருகையாளர்கள் வரும் நவம்பர் 22ஆம் தேதி காலை 10 மணி முதல் VTL அனுமதிக்கு விண்ணப்பிக்கலாம்.

ஆனால் சிங்கப்பூர் குடிமக்கள், நிரந்தரவாசிகள் மற்றும் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் விண்ணப்பிக்க வேண்டியதில்லை.

சிங்கப்பூர் வந்தவுடன், பயணிகள் PCR பரிசோதனையை எடுக்க வேண்டும், மேலும் சோதனை முடிவு நெகடிவ் என இருந்தால் தனிமை இல்லாமல் அவர்கள் வேலைகளை தொடரலாம்.

படிப்படியாக பாதுகாப்பு நடவடிக்கைகளை தளர்த்தி வருகிறது சிங்கப்பூர் – பிரதமர் லீ