தடுப்பூசியினால் ஏற்பட்ட பக்கவிளைவுக்கு அரசாங்க நிதி: சிங்கப்பூரில் 296 நோயாளிகள் தகுதி – நிதி உதவி எவ்ளோ தெரியுமா?

(Photo: Ministry of Health)

சிங்கப்பூரில் 296 நோயாளிகள் தடுப்பூசி பக்கவிளைவு நிதி உதவித் திட்டத்தின்கீழ் (Vifap) அரசாங்க நிதி உதவி பெற தகுதி பெற்றுள்ளனர்.

இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி வரையிலான நிலவரப்படி வெளியிடப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் வெளிநாட்டு கட்டுமான ஊழியருக்கு சிறைத்தண்டனை, அபராதம்

கோவிட்-19 தடுப்பூசிகள் தொடர்பாக ஏற்பட்ட பக்கவிளைவுகளுக்கு நிதி உதவி பெறும் திட்டத்தின்கீழ் அவர்கள் தகுதி பெற்றுள்ளனர்.

கடந்த ஆண்டு ஆகஸ்டில் இந்த எண்ணிக்கை 144ஆக இருந்தது என்று சுகாதார அமைச்சகம் (MOH) தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம் கூறியது.

கடந்த ஆகஸ்டில் S$782,000 செலுத்தப்பட்ட உதவி தொகை, தற்போது மொத்தம் S$1,262,000 ஆக செலுத்தப்பட்டுள்ளது அல்லது செலுத்தப்படும் நிலையில் உள்ளது என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அரசாங்க நிதி உதவி தகுதிகள்

இறந்தவர்கள் அல்லது கடுமையான நிரந்தர முடக்கம் அடைந்தவர்கள் S$225,000 பெறுவார்கள்.

உயர் சார்பு வார்டு அல்லது தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் குணமடைந்தவர்கள் S$10,000 பெறுவார்கள்.

மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, மருத்துவ உதவி தேவைப்படுபவர்கள் S$2,000 பெறுவார்கள்.

சிங்கப்பூரில் S$1,500 வரை ஊதியம் பெறும் சில “Work permit” பணியாட்கள் – அவர்களுக்கு மட்டும் என்ன சலுகை?