வெளிநாட்டில் இருந்து சிங்கப்பூர் வந்த 3 ஆடவர்கள்.. கோவில்களில் உண்டியல் திருட்டு – வீடியோ பார்த்து திருட வந்ததாக தகவல்

Singapore job scam money mules
File Photo : Singapore Police

வெளிநாட்டில் இருந்து சிங்கப்பூர் வந்த 3 நபர்கள் வழிபாட்டு தலங்களில் உண்டியல் திருட்டில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சமூக ஊடகங்களில் வீடியோக்களை பார்த்து திருட கற்றுக்கொண்ட அவர்கள், அந்த முறையைப் பயன்படுத்தி சிங்கப்பூரில் கைவரிசையை காட்டியுள்ளனர்.

சிங்கப்பூரில் 50 ஆண்டுகளுக்கு மேலாக திருட்டில் ஈடுபட்டு வரும் வெளிநாட்டு பெண்..

சீனாவைச் சேர்ந்த அவர்கள் மூவரும், சிங்கப்பூரில் உள்ள தேவாலயங்கள் மற்றும் கோவில்களில் திருட வந்ததாக கூறியுள்ளனர்.

இந்நிலையில், Zou Fangshou (32), Qin Xiaonuo (29), Qin Chaoban (38) ஆகியோருக்கு தலா ஏழு மாத சிறைத்தண்டனை நவம்பர் 2 ஆம் தேதி விதிக்கப்பட்டது.

அவர்கள் ஒவ்வொருவரும் பொதுவான நோக்கத்துடன் திருட்டில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டனர்.

அவர்கள் 6 வழிபாட்டு தலங்களில் S$1,479 ரொக்க பணத்தை திருடியதாகவும் சொல்லப்பட்டுள்ளது.

அந்த மூவரும் இந்த ஆண்டு செப்டம்பர் 6 ஆம் தேதி சமூக வருகை அனுமதியின்கீழ் சிங்கப்பூர் வந்தனர்.

செப்.7 மற்றும் செப்.8 ஆம் தேதிகளில், சிங்கப்பூரில் உள்ள தேவாலயங்கள் மற்றும் கோவில்களை தேடி கண்டுபிடித்தனர்.

பின்னர் அவர்கள் மூவரும் டாக்சிகளில் அங்கு சென்று திருட்டில் ஈடுபட்டதாக சொல்லப்பட்டுள்ளது.

இரண்டு நாட்களில் அந்த மூவரும் தாம்சன் சாலை, பொங்கோல் மற்றும் உட்லண்ட்ஸ் போன்ற இடங்களில் உள்ள மூன்று தேவாலயங்கள், இரண்டு கோயில்கள் மற்றும் ஒரு மடாலயத்திற்குச் சென்றனர்.

அவர்கள் நன்கொடை பெட்டிகளில் இருந்து திருடுவதை CCTV கேமராக்கள் மூலம் ஊழியர்கள் கண்டறிந்தனர்.

இதனை அடுத்து அவர்கள் போலீசில் புகார் அளித்ததை அடுத்து அவர்கள் பிடிபட்டனர்.

சிங்கப்பூரில் வேலைபார்க்கும் வெளிநாட்டினருக்கு மனிதவள அமைச்சகம் எச்சரிக்கை