COVID-19: சிங்கப்பூரில் நேற்று ஒரே நாளில் மூன்று பேர் மரணம்.!

Pic: Mohd RASFAN/AFP

சிங்கப்பூரில் கொரோனா கிருமித்தொற்று காரணமாக நேற்று (ஆகஸ்ட் 27) ஒரே நாளில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கிருமித்தொற்று காரணமாக மரணமடைந்த மூன்று பேரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை என சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.

சிங்கப்பூரில் நேற்று மரணமடைந்த மூத்த குடிமக்கள் மூன்று பேரில், 80 வயது முதியவர் மற்றும் 90 வயது மூதாட்டி, 70 வயது பெண் ஆகியோர் அடங்குவர்.

கொரோனா சுய பரிசோதனை கருவிகள் இன்று முதல் வீடுகளுக்கு அஞ்சல் மூலம் விநியோகம்!

கிருமித்தொற்று காரணமாக மரணமடைந்த 90 வயது மூதாட்டிக்கு, புற்றுநோய், இதய நோய், உயர் ரத்த அழுத்தம் ஆகியவை இருந்ததாகவும், 70 வயது பெண்ணுக்கு நீரிழிவு நோய், இதய நோய், உயர் ரத்த அழுத்தம், சிறுநீரகக் கோளாறு ஆகியவை இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 80 வயது ஆடவருக்கு நாள்பட்ட நோய்கள் எதுவும் இல்லை என கூறப்பட்டுள்ளது. சிங்கப்பூரில்
கிருமித்தொற்றால் இம்மாதம் மட்டும் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

சிங்கப்பூரில் COVID-19 கிருமித்தொற்று காரணமாக ஏற்பட்ட இறப்புகளின் மொத்த எண்ணிக்கை தற்போது 55ஆக உயர்ந்துள்ளது.

சிங்கப்பூர் மக்கள் தொகையில் முழுமையாக கொரோனா தடுப்பூசியைப் போட்டுக் கொண்டவர்கள் 79% பேர்!