வெளிநாட்டு பணிப்பெண்களுக்கு பராமரிப்பு சான்றிதழ் – சிங்கப்பூரில் இப்படி இருப்பதே பலருக்கு தெரியாது!

Pic: FAST/Screenshot

சிங்கப்பூரில் வெளிநாடுகளை சேர்ந்த இரு பணிப்பெண்கள் உட்பட 300 பேர் முதியோர் பராமரிப்பு துறையில் பயிற்சி பெற்று நேற்று (மார்ச் 27) சான்றிதழ் பெற்றுள்ளனர்.

பிலிப்பின்ஸ் நாட்டை சேர்ந்தவரான லேயெஸ் ரோஸலின் கேரோ (36) என்பவர் 6 ஆண்டுகளுக்கு முன்னர் சிங்கப்பூர் வந்துள்ளார். இவருக்கு முதியோர் பராமரிப்புத் துறையில் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது.

சிங்கப்பூரில் பணியாற்றிக்கொண்டு தனது சம்பளத்தின் மூலம் பிலிப்பின்ஸில் உள்ள குடுபத்தினர்களுக்கு ஆதரவளித்து வருகிறார்.

சிங்கப்பூரில் இருந்து இந்தியா… “வாரம் 5 விமான சேவை” – குறைந்த கட்டணம் சிறந்த சேவை!

இவர், கொரோனா சூழலை பயன்படுத்திக்கொண்டு, ஃபாஸ்ட் (Fast) என அழைக்கப்படும் சமூக ஆதரவு, பயிற்சிக்கான வெளிநாட்டு இல்லப் பணிப் பெண்கள் சங்கம் நடத்திய முதியோர் பராமரிப்பில் பயிற்சி பெற்று சான்றிதழ் பெற்றுள்ளார்.

முதியோரை பராமரிப்பதற்கு எப்படி சான்றிதழ் பெறுவது எனபது முதலில் எனக்கு தெரியவில்லை என்றும், இந்த திட்டத்தில் சேர ஃபாஸ்ட் எனக்கு வழிகாட்டியது என்றும், இதனை நான் மிகவும் விரும்பி கற்றுக்கொண்டேன் என்றும் லேயெஸ் குறிப்பிட்டார்.

மேலும், சிங்கப்பூரில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வரும் இலங்கை நாட்டை சேர்ந்த வர்னகுலசூர்ய மேரி கயானி ஃபெர்னாண்டோ என்பவரும் இந்த பயிற்சியை முடித்துள்ளார். நான் கற்றுக்கொண்ட திறன் எனக்கு மட்டுமல்லாமல் சமூகத்திற்கும் பயனுள்ளதாக இருக்கும் என அவர் கூறினார்.

இவர், கடந்த 2 ஆண்டுகளாக தமது முதலாளியின் மூத்த குடும்ப உறுப்பினர்களை பராமரித்து வருகிறார். சிங்கப்பூரில் ஃபாஸ்ட் 2005ம் ஆண்டு முதல் இல்லப் பணிப்பெண்களுக்கு முதியோர் பராமரிப்பில் பயிற்சி அளித்து வருகிறது. 2025ம் ஆண்டுக்குள் முதியோர் பராமரிப்பில் சுமார் 10,000 இல்லப் பணிப்பெண்களுக்கு பயிற்சி அளிக்க ஃபாஸ்ட் திட்டமிட்டுள்ளது.

கோவிட்-19 நடவடிக்கை தளர்வு: “பீர் எடு கொண்டாடு” என இலவச பீர் வழங்கும் Tiger Beer!