சிங்கப்பூரில் பாதிக்கப்படும் 32 பேருந்து சேவைகள்; ஏன்..?

32 bus services affected ndp rehearsals
SBS Transit & NDP

சிங்கப்பூரில் மூன்று தொடர் சனிக்கிழமைகளில் 32 பேருந்து சேவைகள் பாதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

அதாவது ஜூன் 10, 17 மற்றும் 24 ஆம் தேதிகளில் அந்த சேவைகள் பாதிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

“வேலையை விட்டு தூக்க போறோம்..” – செய்தி அறிந்து கண்ணீர் வடித்த ஊழியர்கள்

ஏனெனில், 2023 ஆம் ஆண்டுக்கான சிங்கப்பூரின் தேசிய தின அணிவகுப்பு (NDP) ஒருங்கிணைந்த ஒத்திகைகள் நடைபெற உள்ளதால் தொடர்ந்து மூன்று சனிக்கிழமைகளில் 32 பேருந்து சேவைகள் பாதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஐந்து SMRT பேருந்து சேவைகள் பாதிக்கப்படும் என்றும், அவை 61, 75, 960, 960e, 961 என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும் 27 SBS ட்ரான்ஸிட் பேருந்து சேவைகள் NDP ஒத்திகை காரணமாக சாலை மூடல்களால் பாதிக்கப்படும்.

அவை: 10, 14, 16/16M, 32, 51, 56, 57, 63, 70/70M, 80, 100, 107/107M, 111, 124, 130, 131, 133, 145, 162/162M, 166, 174, 195, 196, 197, 502, 851 மற்றும் 851e.

பாதிக்கப்படும் நிறுத்தங்கள்

SMRT

பயணிகள் தங்கள் பயணங்களை முன்கூட்டியே திட்டமிடவும், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு MRT ரயில் சேவைகளை தேர்வு செய்யவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

சிங்கப்பூரில் இருந்து திருச்சி சென்ற விமானம்.. சோதனையில் லாக் செய்த போலீஸ்